Ramayana Part 1: ரன்பீர் கபூரின் ‘ராமாயணம் பார்ட் 1’ படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு!
Ramayana Movie Glimpse Video : பான் இந்திய திரைப்படமாக உருவாகிவருவது ராமாயணம் பார்ட் 1. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாலிவுட் முன்னணி இயக்குநர்களில் ஒருவர்தான் நிதேஷ் திவாரி (Nitesh Tiwari). இவரின் இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து இவர் பான் இந்தியப் படமாக உருவாக்கிவருவது ராமாயணம் பார்ட் 1 (Ramayana Part 1). இந்த படமானது இந்து புராணக் கதையான ராமாயணத்தை வைத்து இரண்டு பாகங்களாக உருவாக்கவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), யாஷ் (Yash) மற்றும் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi ) முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படமானது ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் மற்றும் நடிகர் யாஷ் ராவணனாகவும் நடித்தது வருகின்றனர்.
இந்த இந்த படத்தின் முதல் பாக்க படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது அதைத் தொடர்ந்து படக்குழு அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இறுதியாக ரன்பீர் கபூர் மற்றும் யாஷின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.




நடிகர் யாஷ் வெளியிட்ட ராமாயணம் படத்தின் அறிமுக வீடியோ பதிவு :
Witness the IMMORTAL story of Rama vs. Ravana 🏹
Ramayana.
Our Truth. Our History.Filmed for IMAX.
From INDIA for a BETTER World.#Ramayana #RamayanaByNamitMalhotra@malhotra_namit @niteshtiwari22 @TheNameIsYash #RanbirKapoor @Sai_Pallavi92 @iamsunnydeol @_ravidubey… pic.twitter.com/4oeEcIALCK
— Yash (@TheNameIsYash) July 3, 2025
ராமாயணம் திரைப்படம் :
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகிவரும் இந்த ராமாயணம் படமானது 2 பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்திருந்த நிலையில், படக்குழு கேக் வெட்டி கொண்டாடியிருந்தனர். அதைத் தொடர்ந்து இப்படத்தின் அறிமுக வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் மூலமாகத்தான் நடிகை சாய் பல்லவி பாலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படமானது நிச்சயம் வெற்றிப் படமாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்து கடவுளான ராமனின் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு பான் இந்திய பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துவருகிறார். மேலும் இந்த படத்தில் முதல் பாகமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் வரும் 2027ம் ஆண்டு தீபாவளியுடன் வெளியாகிறது எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் நடிகர் யாஷ் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் படமாக இது இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதில் நடிகர் யாஷூக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இராமாயணம் பார்ட் 1 படமானது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாகிறது என்று கூறப்படுகிறது.