மும்பை மலாட் வெஸ்ட் பகுதியில் பழங்கள் விற்பனை செய்த இரண்டு விற்பனையாளர்கள், விற்கப்பட்ட பழங்களில் எலி விஷம் தடவியதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஒருவர் அளித்த புகார் மற்றும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். சோதனையின் போது, பழக்கடையில் இருந்து ராட்டோல் எனப்படும் எலியை கொல்ல பயன்படுத்தும் விஷம் கைப்பற்றப்பட்டது. இந்த விஷத்தில் மனிதர்களுக்கு மிக ஆபத்தான மஞ்சள் பாஸ்பரஸ் போன்ற நச்சு ரசாயனங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு அந்த சாலை ஓர கடை உடனடியாக மூடப்பட்டது.