Viral Video : மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய இரட்டை டூம்ஸ்டே மீன்கள்.. பேரழிவின் அறிகுறியா?
A Pair of Doomsday Fish Seen Near Shore In Mexico | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மெக்சிகோ கடற்கரையில் இரண்டு டூம்ஸ்டே மீன்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில சுவாரஸ்யமாகவும், சில நகைச்சுவையாகவும் இருக்கும் நிலையில், சில வீடியோக்கள் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்த வகையில், காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையிலான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய டூம்ஸ்டே மீன்
உலகம் பல அதியசங்களை தன்னுள் கொண்டுள்ளது. அத்தகைய அதியசங்களில் ஒன்றுதான் டூஸ்டே மீன். இந்த மீன் அழ்கடலில் வாழக்கூடியது. இந்த மீன் எப்போதெல்லாம் கடலின் மேற்பரப்பிற்கோ அல்லது கரை ஒதுங்குகிறதோ அப்போதெல்லாம் உலகம் ஏதேனும் பெரிய இழப்பை அல்லது பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது. காரணம் இதுவரை இந்த மீன் கரை ஒதுங்கியபோதெல்லாம் ஏதேனும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது மெக்சிகோ கடற்கரையில் இந்த டூம்ஸ்டே மீன் கரை ஒதுங்கியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க : Viral Video : போக்குவரத்து காவலரை காரில் இழுத்துச் சென்ற இளைஞர்.. பகீர் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சிலர் கடற்கரையில் குளித்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது திடீரென ஒரு ராட்சத டூம்ஸ்டே மீன் ஒன்று கரை ஒதுங்குகிறது. அப்போது இன்னொரு டூம்ஸ்டே மீனும் கரை ஒதுங்குகிறது. இதனை கண்டு அங்கிருக்கும் நபர்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்திற்கு உள்ளாகின்றனர். பிறகு அவர்கள் அனைவரும் இணைந்து அந்த மீனை மீண்டும் கடலுக்குள் தள்ள முயற்சி செய்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : இந்த மொழி புரியவில்லையே.. ஆனால் அவ்வளவு அழகு.. மழலையின் செல்ல பேச்சின் வீடியோ வைரல்!
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், என்ன ஆபத்து நிகழ போகிறதோ என பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.