AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பூசாரியை தலைகீழாக தூக்கி வீசிய யானை.. அதிர்ச்சி வீடியோ!

Elephant Lift and Thrown a Man In Kerala | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், யானை ஒன்று பூசாரியை தலை கீழாக தூக்கி வீசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : பூசாரியை தலைகீழாக தூக்கி வீசிய யானை.. அதிர்ச்சி வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Feb 2026 22:45 PM IST

உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வரும். அந்த வகையில், யானை ஒன்று அருகில் நின்றுக்கொண்டு இருந்த நபரை தூக்கி வீசும் வீடியோ ஒன்று மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது, இந்த சம்பவம் எங்கு நடைபெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அருகில் இருந்தவரை தூக்கி வீசிய யானை – பகீர் சம்பவம்

கேரளாவில் திருவிழாக்களின்போது யானைகளை பயன்படுத்துவது பாரம்பரியமாக உள்ளது. அவ்வாறு யானைகள் பயன்படுத்தும்போது, அவற்றுக்கு மதம் பிடித்து பொதுமக்களை துரத்துவது, மிதிப்பது உள்ளிட்ட செயல்களை செய்யும். இவ்வாறு பல்பேறு வீடியோக்கள் தினந்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், யானை ஒன்று அருகில் நின்றுக்கொண்டு இருந்த நபரை தனது தும்பிக்கையால் தூக்கி வீசும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : தாயால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வாடும் குட்டி குரங்கு.. இணையத்தை துயரத்தில் ஆழ்த்திய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by The Tatva (@thetatvaindia)

கேரள மாநிலம், திருச்சூர் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது திருவிழாவில் யானைகள் வரவழைக்கப்பட்டு இருந்த நிலையில், அவற்றுக்கு அருகில் பூசாரிகள் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அப்போது அங்கிருக்கும் யானை ஒன்று தனக்கு அருகில் இருக்கும் பூசாரி ஒருவரை தலைகீழாக தூக்கி தூரம் வீசுகிறது. அதனை கண்டு அங்கிருக்கும் நபர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : அச்சு அசல் மனிதர்களை போலவே ஸ்டண்ட், நடனம் செய்த ரோபோக்கள்!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து கடும் அதிர்ச்சியில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வைரலாகி வருகிறது.

Follow Us