அச்சு அசல் மனிதர்களை போலவே ஸ்டண்ட், நடனம் செய்த ரோபோக்கள்!
Humanoid Robots Exactly Performs Like Human In China | மனித வடிவிலான ரோபோக்கள் தொடர்பான ஆய்வுகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், சீனாவில் மனித ரோபோக்கள் சில மனிதர்களை போலவே நடனமாடுவது, ஸ்டண்ட் செய்வது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகம் மிக வேகமாக முன்னேறிக்கொண்டே செல்கிறது. வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகளும், அதன் அசத்தல் அம்சங்களும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளன. அந்த வகையில், சீனாவில் (China) ரோபோக்கள் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ ஒன்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மனிதர்களை போலவே தத்ரூபமாக அந்த ரோபோக்கள் அசைகின்றன. மனித ரோபோக்களை உருவாக்கி அவற்றை மனிதர்களை போலவே செயல்பட வைக்க வேண்டும் என்ற திட்டம் தற்போது நிஜமாகியுள்ளது.
மனிதர்களை போலவே தத்ரூபமாக ஸ்டண்ட் செய்த ரோப்போக்கள்
சீனாவில் ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி சமீபத்தில் தனது 2026 ஆம் ஆண்டுக்கான வசந்த விழாவை கொண்டாடியது. இந்த நிகழ்வில் சீன நிறுவனங்கள் தங்களின் மனித ரோபோக்களை காட்சிப்படுத்தின. அப்போது அந்த ரோபோக்கள் மனிதர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் அப்படியே மனிதர்களை போலவே தத்ரூபமாக செய்தன. பாதுகாப்பு ஸ்டண்ட்கள் மற்றும் நடனங்கள் என அவை அச்சு அசல் மனிதர்களை போலவே செயல்பட்டன.
இதையும் படிங்க : ஸ்மார்ட்போனில் தேங்கி கிடக்கும் ஜங்க் டேட்டா.. கிளியர் செய்வது எப்படி?
ரோபோக்கள் நடத்திய இந்த நிகழ்ச்சி சுமார் 4 நிமிடங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சி முழுவதும் அந்த ரோபோக்கள் எங்கேயும் சிறு தவறு கூட நிகழாமல் துல்லியமாக ஸ்டண்ட் மற்றும் நடனத்தை நிகழ்த்தின. தொழில்நுட்பத்தின் சிறப்பை விளக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீன நிகழ்ச்சியில் அசத்திய ரோபோக்கள் – வைரலாகும் வீடியோ
🤯Absolutely insane. Unitree’s humanoid robot team’s performance at the 2026 Spring Festival Gala
The significance of the humanoid robot’s performance lies in letting 1.4 billion Chinese people know where the future lies. pic.twitter.com/6vXIX2MfWM
— CyberRobo (@CyberRobooo) February 16, 2026
அந்த நிகழ்ச்சியில் ரோபோக்களுடன் இணைந்து சில மனிதர்களும் நடனமாடுகின்றனர். அவர்கள் எப்படி உடலை வளைத்து செயல்களை செய்கிறார்களோ அதேபோல அந்த ரோபோக்களும் செய்கின்றன. இந்த வீடியோ காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக அமைந்துள்ளது.