AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்மார்ட்போனில் தேங்கி கிடக்கும் ஜங்க் டேட்டா.. கிளியர் செய்வது எப்படி?

Remove Junk Data In Your Smartphone | ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது தான் ஜங்க் டேட்டா. இந்த நிலையில், ஜங்க் டேட்டாவை கிளியர் செய்து ஸ்மார்ட்போனை ஸ்டோரேஜ் சிக்கல் இல்லாமல் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போனில் தேங்கி கிடக்கும் ஜங்க் டேட்டா.. கிளியர் செய்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 15 Feb 2026 13:16 PM IST

மனிதர்களின் வாழ்வில் ஸ்மார்ட்போன் மிக முக்கிய அங்கமாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத சூழல் தான் பலருக்கும் உள்ளது. இவ்வாறு மிக முக்கிய கருவியாக ஸ்மார்ட்போன் உள்ள நிலையில், திடீரென ஸ்மார்ட்போன் செயல்படவில்லை என்றால் என்ன ஆகும். நாம் ஸ்மார்ட்போனை வாங்கும்போது இருக்கும் சில நாட்களுக்கு பிறகு படிப்படையாக குறைந்துவிடும். காரணம் நாம் ஸ்மார்ட்போனை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறோம், அதில் எவ்வளவு ஸ்டோரேஜ் உள்ளது என்பதை பொருத்து இந்த மாற்றம் ஏற்படும்.

பலருக்கு நாளடைவில் ஸ்டோரேஜ் தீந்துவிடும் நிலையில், அவர்களது ஸ்மார்ட்போன் அப்படியே நின்றுவிடும் சிக்கலை எதிர்கொள்வர். இத்தகைய சிக்கலை நீங்கள் எதிர்க்கொள்ளாமல் இருக்க உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஜங்க் டேட்டாவை கிளியர் செய்தாலே போதும்.

கேச் டேட்டா

நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலியும், உங்கள் ஸ்மார்ட்போனில் சில ஃபைல்களை தற்காலிகமாக சேமிக்கும். அவ்வாறு சேமிக்கப்படும் ஃபைல்கள் தான் கேட்ச் டேட்டா (Catch Data) என அழைக்கப்படுகிறது. இந்த கேட்ச் டேட்டா உங்களது ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை நிரப்பிடும். இதன் காரணமாக ஸ்டோரேஜ் குறைபாடு காரணமாக ஒரு செயலியை திறப்பது கூட உங்களுக்கு மிக கடினமானதாக மாறிவிடும்.

இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான லாவா யுவா ஸ்டார் 3!

தேவையற்ற செயலிகள்

நாம் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யும் ஒவ்வொரு செயலியும் குறிப்பிட்ட அளவு இடத்தை பிடித்துக்கொள்ளும். இந்த சூழலில் நீங்கள் அதிக செயலிகளை பயன்படுத்தினால் உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மிக சீக்கிரமாகவே நிரம்பிவிடும். எனவே நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் சீராக இயங்க வேண்டும் என்றால் தேவையற்ற செயலிகளை அவ்வப்போது நீக்கம் செய்வது சிறப்பானதாக இருக்கும்.

இதையும் படிங்க : இனி பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படாது.. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஷாக் கொடுத்த கூகுள்!

போட்டோ கேலரி

ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மிக சீக்கிரமே நிரம்புவதற்கு கேலரி தான். காரணம் கேலரியில் (Gallery) ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருக்கும். குறிப்பாக வாட்ஸ்அப் (WhatsApp) செயலி பயன்படுத்தும் நபர்களின் கேலரியில் தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக அளவு இருக்கும். அவற்றை கிளியர் செய்வதன் மூலம் மிக சுலபமாக ஸ்டோரேஜ் சிக்கலை தீர்க்க முடியும்.

Follow Us