AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான லாவா யுவா ஸ்டார் 3!

Lava Yuva Star 3 Smartphone Introduced In India | லாவா நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான லாவா யுவா ஸ்டார் 3!
லாவா யுவா ஸ்டார் 3
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 12 Feb 2026 18:27 PM IST

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக லாவா (Lava) உள்ளது. ஏராளமான பொதுமக்கள் லாவா நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் லாவா நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போனை (Lava Yuva Star 3 Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

லாவா நிறுவனம் தனது பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2025 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட லாவா யுவா ஸ்டார் 2 ஸ்மார்ட்போனில் (Lava Yuva Star 2 Smartphone) உள்ளதை போலவே சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரு சில வித்தியாசங்கள் மட்டுமே உள்ளன. மற்றபடி, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே வகையான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன.

இதையும் படிங்க : ஏஐ இந்திய ஐடி ஊழியர்களை பாதிக்காது.. குட் நியூஸ் சொன்ன நாஸ்காம்!

லாவா யுவா ஸ்டார் 3 – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போன் 6.75 இன்ச் HD+LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் Unisco 9863A பிராசசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உங்கள் ஆண்ட்ராய்டு போனில் சாஃப்ட்வேர் அப்டேட் செய்யவில்லையா? கூகுள் எச்சரிக்கை

விலை மற்றும் இதர அம்சங்கள்

4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் ரூ.7,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் நபர்களுக்கு 1 ஆண்டு வாரண்டி மற்றும் இலவச சேவையை லாவா வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2026 மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us