AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏஐ இந்திய ஐடி ஊழியர்களை பாதிக்காது.. குட் நியூஸ் சொன்ன நாஸ்காம்!

NASSCOM On IT Jobs | செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் வளர்ச்சியால் உலக அளவில் ஐடி ஊழியர்கள் தங்களது பணியை இழந்து வருகின்றனர். இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் காரணமாக இந்திய ஐடி ஊழியர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.

ஏஐ இந்திய ஐடி ஊழியர்களை பாதிக்காது.. குட் நியூஸ் சொன்ன நாஸ்காம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Feb 2026 14:12 PM IST

தொழில்நுட்ப வளர்ச்சியின் (Technology Development) உச்சமாக செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் உள்ள நிலையில், அது பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக அளவில்  ஏராளமான ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல லட்சம் ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் தங்களது பணியை இழந்துள்ள நிலையில், அந்த பதற்றம் ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகிறது. குறிப்பாக ஐடி துறையில் பணியாற்றும் நபர்களுக்கு செயற்கை நுண்ணறிவு அம்சம் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த நிலையில், இந்திய ஐடி ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய அறிவிப்பு ஒன்றை நாஸ்காம் வெளியிட்டுள்ளது.

இந்திய ஐடி ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் பெருகி வருவதன் காரணமாக உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதனால், உலக அளவில் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் மத்தியில் ஒரு விதமான கலக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய ஐடி துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தொழில்நுட்ப துறை அமைப்பான நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அமைந்துள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் இந்திய ஐடி துறை ஊழியர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ ரெனோ 15 சி!

ஐடி நிறுவனங்களின் திறன்களை ஏஐ கருவிகள் மேலும் வலுப்படுத்தும் – நாஸ்காம்

செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் வரவால் இந்திய தொழில்நுட்ப சேவை துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் அடிப்படையற்றது. மாறாக, இந்த துறையின் செயல்பாடுகள் மற்றும் பங்களிப்புகளை ஏஐ மேலும் ஒழுங்குப்படுத்தி, திறன் மிக்கதாக மாற்றும். ஆந்த்ரோபிக்கின் “கிளாட் கோவர்க்” போன்ற புதிய ஏஐ கருவிகள் பல்வேறு பணிகளை தானியங்கி முறையில் மேற்கொள்ள உதவும்.

இதையும் படிங்க : லேப்டாப்பில் இருக்கும் இந்த கீ பல வேலைகளை செய்யும்.. பலருக்கும் தெரியாத விஷயம்!

இருப்பினும் அவை இந்திய ஐடி சேவைகளை புறக்கணிக்கவோ மாற்றிவிடவோ போவதில்லை. அதற்கு பதிலாக இந்திய ஐடி நிறுவனங்களின் திறன்களை ஏஐ கருவிகள் மேலும் வலுப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us