AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன்கள்!

Redmi Launched Redmi Note 17 and Note 17 Pro | ரெட்மி நிறுவனம் புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ரெட்மி நோட் 17 மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன்கள்!
ரெட்மி நோட் 17
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Jul 2026 13:39 PM IST

இந்திய ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையில் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளதுதான் ரெட்மி (Redmi). இந்த நிறுவனம் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில், அதிக வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 17 (Redmi Note 17) மற்றும் நோட் 17 ப்ரோ (Redmi Note 17 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், ரெட்மி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 17, நோட் 17 ப்ரோ

ரெட்மி அறிமுகம் செய்துள்ள இந்த ரெட்மி நோட் 17 மற்றும் நோட் 17 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளன. குறிப்பாக இந்த சீரிஸில் ஸ்மார்ட்போனக்ளின் பேட்டரி 8,000 mAh ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 50 மெகாபிக்சல் ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ள நிலையில், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.5,000 வரை உயர்த்திய ஒன்பிளஸ் மற்றும் ஜியோமி நிறுவனங்கள்!

ரெட்மி நோட் 17, நோட் 17 ப்ரோ – சிறப்பு அம்சங்கள்

ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போனில் 7 இன்ச் HD+OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இது 50 மெகாபிசல் ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்காக 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோ 17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 6எஸ் கென் 4 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : வரலாற்றில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரோபோக்கள்!

இந்த ப்ரோ ஸ்மார்ட்போன் 8ஜிபி அல்லது 128ஜிபி ரேம் அம்சத்தை கொண்டுள்ளது. இதேபோல 128ஜிபி, 256 ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us