ஐபோன் 17-ஐ விட விலை அதிகம்.. ரூ.1,34,166-க்கு மொபைல் போனை அறிமுகம் செய்த BSNL.. எப்படி என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன!
BSNL Introduced Its New Satellite Mobile Phone | இந்திய குடிமக்களுக்கு சற்று குறைந்த விலையில், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது தனது புதிய சாட்டிலைட் மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஏராளமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், தனியார் நிறுவனங்களை விடவும் மிக குறைவான விலையில் மக்களுக்கு தரமான சேவைகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனமாக அரசின் பிஎஸ்என்எல் (BSNL) இருந்து வருகிறது. இதுவரை பிஎஸ்என்எல் நிறுவனம் ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வந்த நிலையில், தற்போது மொபைல் போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் அந்த மொபைல் ஆப்பிள் போன் ஐபோன் 17-ஐ (Apple iPhone 17) விட விலை உயர்ந்ததாக உள்ளது. இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அந்த புதிய மொபைல் போனின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதிய சாட்டிலைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது புதிய சாட்டிலைட் மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் போனை பயன்படுத்தி, மொபைல் டவர் இல்லாத நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் கூட பேச முடியும். இந்த மொபைல் போன் சாட்டிலைட் அடிப்படையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, மொபைல் டவர், நெட்வொர்க் குறித்தெல்லாம் கவலை தேவையில்லை. இந்த மொபைல் போனை பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1,34,166-க்கு அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படிங்க : பூஜ்ஜியமாக குறைந்த யானை உயிரிழப்பு விகிதம்.. மாற்றத்தை ஏற்படுத்திய ஏஐ கண்காணிப்பு மையம்.. குவியும் பாரட்டுகள்!
பிஎஸ்என்எல் சாட்டிலைட் மொபைல் போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
- மொபைல் டவர்கள் இல்லாத பகுதிகளிலும் கூட, போன் பேச முடியும்.
- தொலைவில் இருந்தும் கூட வாய்ஸ் கால் பேச முடியும்.
- ஆபத்தான சூழல்களில் SOS எமர்ஜென்சி உதவியை பெறலாம்.
- சார்ஜ் செய்யும் வசதி இல்லாத இடங்களில் கூட நீண்ட நேரம் பயன்படுத்தும் தன்மை கொண்ட பேட்டரி அம்சம்.
- கடினமான சூழல்களிலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் மிக கடுமையான தோற்றம்.
இதையும் படிங்க : ரூ.29,000 தள்ளுபடியில் கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 15.. பிளிப்கார்டின் இந்த சேலை மிஸ் பண்ணிடாதீங்க!
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த சிறப்பு அம்சங்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேட்டிலைட் மொபைல் போனில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.