ரூ.29,000 தள்ளுபடியில் கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 15.. பிளிப்கார்டின் இந்த சேலை மிஸ் பண்ணிடாதீங்க!
Flipkart 2026 Goat Sale | பிளிப்கார்ட் நிறுவனம் தனது 2026 கோட் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போனுக்கு ரூ.29,000 தள்ளுபடி அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள இ காமர்ஸ் (e Commerce) நிறுவனமாக உள்ளது தான் பிளிப்கார்ட் (Flipkart). இந்த நிறுவனம் தொடர்ந்து தனது பயனர்களுக்காக பல சேல்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது 2026 பிளிப்கார்ட் கோட் சேலை (2026 Flipkart Goat Sale) அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போனுக்கு (Apple iPhone 15 Smartphone) ரூ.29,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பிளிப்கார்டின் இந்த சேலில் ஐபோன் 15-க்கு வழங்கப்பட்டுள்ள தள்ளுபடி குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிளிப்கார்ட் கோட் சேல் – ஐபோன் 15-க்கு அசத்தல் தள்ளுபடி
பிளிப்கார்டின் இந்த கோட் சேலில் ஆப்பிள் ஐபோன் 15-க்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.79,900 மதிப்புக்கொண்ட இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.56,900-க்கு பிளிப்கார்ட் வழங்குகிறது. அதாவது, ரூ.29,000 தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் விற்பனை செய்கிறது. பிளிப்கார்டின் சலுகையின் படி ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.56,900 ஆக உள்ளது. இதுவே சில வங்கி சலுகைகளை பயன்படுத்துவதன் மூலம் ரூ.50,255-க்கே வாங்கிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : பிளிப்கார்ட் 2026 கோட் சேல்.. ஸ்மார்ட்போன் முதல் ஸ்மார்ட் டிவி வரை.. அசத்தல் தள்ளுபடி!
ஐபோன் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு
பல ஆண்டுகளாக ஐபோன் வாங்க நினைத்து காத்திருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் ஏ16 பயோனிக் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இதன் காரணமாக, இந்த ஸ்மார்ட்போன் அன்றாட வேலைகளை செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி மெயின் மற்றும் 12எம்பி அல்ட்ரா வைட் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : WhatsApp-க்கு செக் வைத்த மத்திய அரசு.. அரட்டை செயலியில் முக்கிய மாற்றத்தை மேற்கொள்ளும் ஸ்ரீதர் வேம்பு!
இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த பேட்டரில் கொடுக்கப்பட்டுள்ளதான் காரணமாக ஒருநாள் முழுவதும் நீடித்து உழைக்கும். ஜூலை 09, 2026 உடன் இந்த சேல் முடிவடைய உள்ளது. எனவே, ஐபோனை குறைந்த விலைக்கு வாங்க நினைக்கும் நபர்கள் இந்த சேலை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.