WhatsApp-க்கு செக் வைத்த மத்திய அரசு.. அரட்டை செயலியில் முக்கிய மாற்றத்தை மேற்கொள்ளும் ஸ்ரீதர் வேம்பு!
Arattai Disabling Username Feature | வாட்ஸ்அப் செயலியில் யூசர் நேம் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், அரட்டை செயலியில் இருந்து யூசர் நேம் அம்சத்தை நீக்குவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் (WhatsApp) செயலி குறித்த அப்டேட் தான் தொடர்ந்து வந்துக்கொண்டே உள்ளது. மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக குணால் ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். அது முதல் அவர் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தான் வாட்ஸ்அப்பில் யூசர் நேம் (WhatsApp User Name) அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்தார்.
ஆனால், மத்திய அரசு வாட்ஸ்அப்பின் அந்த புதிய அம்சத்தை நிறுத்தி வைக்க கோரி உத்தரவிட்டுள்ளது. அந்த அம்சத்தின் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகே அதனை அறிமுகம் செய்ய முடியும் என கூறியுள்ளது. ஆனால், மத்திய அரசின் உத்தரவின்படி யூசர் நேம் அம்சத்தை நிறுத்தி வைப்பதாக வாட்ஸ்அப் இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அரட்டையில் யூசர் நேம் அம்சம் நீக்கப்படும் – ஸ்ரீதர் வேம்பு
இந்த நிலையில் தான் சோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அரட்டை (Arattai) செயலில் யூசர் நேம் அம்சத்தை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வேம்பு, பயனர்கள் அரட்டை செயலியில் இருந்து வேறு செயலியில் உள்ள பயனர்களுடன் உரையாட உதவும் யூசர் நேம் அம்சத்தை நிறுத்த உள்ளதாக கூறியுள்ளார்.




இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப் பிசினஸ் ஏஐ ஏஜெண்ட் அம்சத்தில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?
வாட்ஸ்அப் செயலிக்கு இணையாக வளர்ச்சியடைந்த அரட்டை செயலி
அரட்டை செயலி 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், 2025 ஆம் ஆண்டு தான் அதன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்தது. உள் நாட்டில் உருவாக்கப்பட்ட செயலியாக அரட்டை உள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் வாட்ஸ்அப் செயலியை விடுத்து அரட்டை செயலிக்கு மாறினர். இதன் காரணமாக அந்த செயலி மிக வேகமாக வளர்ச்சியை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : விவோ முதல் ரியல்மி வரை.. ரூ.7,000 வரை ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்திய நிறுவனங்கள்!
இந்த நிலையில், யூசர் நேம் அம்சத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்த வாட்ஸ்அப்பிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டு நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஸ்ரீதர் வேம்பு தனது அரட்டை செயலியில் இந்த மாற்றத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.