அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன்!
OnePlus N6 Smartphone Introduced In India | ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிக முக்கிய நிறுவனமாக ஒன்பிளஸ் உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனை (OnePlus N6 Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், மீடியாடெக் டைமன்சிட்டி 6000 சீரீஸ் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. மேலும், 8,000 mAh பேட்டரி அம்சத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 04, 2026 முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.




இதையும் படிங்க : Gmail : ஸ்டோரேஜ் சிக்கலா?.. ஜிமெயிலில் தேவையற்ற மெயில்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி?
ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
OnePlus N6 launched in India pic.twitter.com/zkONYLrasb
— OnePlus Club (@OnePlusClub) June 30, 2026
இந்த ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் HD LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது octa – core மீடியாடெக் டைமன்சிட்டி 6360 Apex சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 8,000 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நூதன மோசடி : ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் இதை கவனிங்க – பகீர் தகவல்
4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.24,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 6 மாத No Cost EMI அம்சத்துடன் வாங்கிக்கொள்ளலாம். ஜூலை 04, 2026 அன்று அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.