AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது சாம்சங் ஏ27 5ஜி.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Samsung Galaxy A27 5G Smartphone Introduced | சாம்சங் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.

அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமானது சாம்சங் ஏ27 5ஜி.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
சாம்சங் கேலஸ்கி ஏ27 5ஜி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Jun 2026 15:26 PM IST

இந்திய ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் சாம்சங். இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போனை (Samsung Galaxy A27 5G Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி

சாம்சங்க் நிறுவனம் ஏ சீரீஸில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தான் தற்போது இந்த ஏ27 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த சாம்சங் ஏ26 5ஜி ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஓப்போ ரெனோ 16 சீரீஸ்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் Full HD+ Super AMOLED Infinity – O டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனி ஸ்டோரேஜை 2டிபி வரை உயர்த்திக்கொள்ள முடியும். 5,000 mAh பேட்ட்ரி மற்றும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

இதையும் படிங்க : அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ்.. விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!

ரூ.33,089 என்ற விலை அடிப்படையில் ஜூலை 14, 2026 அன்று இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us