வெறும் ரூ.79 கட்டணத்தில் வாட்ஸ்அப் பிளஸில் இத்தனை அம்சங்களா?.. லிஸ்ட் இதோ!
WhatsApp Plus Features | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளஸ் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சத்தில் ஏற்கனவே இருப்பதை விட பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என மெட்டா கூறியிருந்தது. இந்த நிலையில், ரூ.79 கட்டணத்திற்கு என்ன என்ன அம்சங்களை பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மெட்டா (Meta) நிறுவனம் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் (WhatsApp) பல்வேறு புதிய புதிய மாற்றங்கள் மற்றும் அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் பிளஸ் (WhatsApp Plus) அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த வாட்ஸ்அப் பிளஸ் அம்சத்தில் பயனர்களுக்கு சில கூடுதல் அம்சங்கள் கிடைக்கும். ஏற்கனவே இருக்கும் அம்சங்களை பயனர்கள் எந்த வித கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் ரூ.79 கட்டணம் செலுத்துவதன் மூலம் என்ன என்ன சிறப்பு அம்சங்களை பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெறும் ரூ.79 செலுத்தினால் இத்தனை அட்டகாசமான அம்சங்களா?
வாட்ஸ்அப்பில் ஏற்கனவே பல அட்டகாசமான அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில், பயனர்கள் கூடுதல் அம்சங்களை பெறும் வகையில் இந்த பிளஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் மட்டுமன்றி, மெட்டா தனது செயலிகளான ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவற்றிலும் இந்த பிளஸ் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், வாட்ஸ்அப்பில் வெறும் ரூ.79 கட்டணம் செலுத்துவதன் மூலம் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற முடியும்.
இதையும் படிங்க : உங்க கிட்ட பழைய போன் இருக்கா? அத ஈஸியா CCTV கேமராவா மாத்தலாம்! எப்படி தெரியுமா?




என்ன என்ன சிறப்பு அம்சங்கள் – லிஸ்ட் இதோ?
- ஃபாரஸ்ட் கிரீன், ப்ளூ உள்ளிட்ட 18 நிறங்களில் மிகவும் அசத்தலான தீம்கள் வழங்கப்படுகிறது.
- வாட்ஸ்அப்பில் உள்ள ஐகானுக்கு பதிலாக பிளஸ் அம்சத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் 14 ஐகான்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- இந்த பிளஸ் அம்சத்தில் பயனர்கள் 10 அற்புதமான ரிங்டோன்களை பெறலாம்.
- வாட்ஸ்அப்பில் உள்ள தொடர்புகளை விருப்பத்திற்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் செய்துக்கொள்ளலாம்.
- 20 சாட்கள் வரை பின் செய்து வைத்துக்கொள்ளலாம்.
- அட்டகாசமான ஸ்டிக்கர் அம்சங்களை பெறலாம்.
இதையும் படிங்க : உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதா? உடனே இதை பண்ணுங்க !
மேற்குறிப்பிட்டுள்ள இந்த அம்சங்களை வெறும் ரூ.79 கட்டணம் செலுத்துவதன் மூலம் வாட்ஸ்அப் பிளஸ் அம்சத்தில் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.