AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. கனடாவை தொடர்ந்து இங்கிலாந்து அரசு அதிரடி!

England Government Ban Social Media For Children | சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் சிறுவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில் தான் சில உலக நாடுகள் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கனடா இடம்பெற்றுள்ளது.

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. கனடாவை தொடர்ந்து இங்கிலாந்து அரசு அதிரடி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jun 2026 00:15 AM IST

சென்னை, ஜூன் 15 : இங்கிலாந்தில் (England) 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சமீபத்தில், கனடா (Canada) அரசு 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அரசும் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்தில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிகப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தள செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அந்த நாட்டின் அதிபர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், குழந்தைகளின் மகிழ்ச்சியும், பாதுகாப்பும் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமராகவும், சிறிய குழந்தைகளின் தந்தையாகவும் இது சரியான முடிவு என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. கடனா அரசு அதிரடி நடவடிக்கை!

குழந்தைகளின் மனநலம், உடல்நலம் முக்கியமானது – கீர் ஸ்டார்மர்

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த தடையை அமல்படுத்துவது எளிதான் காரியம் அல்ல. என்றாலும், குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மன நலன் மிகவும் முக்கியமானது ஆகும். 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக வலைத்தளங்களை அணுகுவதற்கு முழுமையான தடை விதிக்கப்படும். இது நாட்டின் எதிர்காலத்துக்கான முக்கியமான மாற்றமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய அம்சம்! இனி 2 வாரங்களுக்கு முன்பே மெசேஜ்களை ஷெட்யூல் செய்யலாம்!

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கனடா அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அரசும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us