AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாட்ஸ்அப்க்கு வருகிறது மெட்டா ஒன் பிளான் – அப்படி என்ன ஸ்பெஷல்?

மெட்டா நிறுவனம் மெட்டா ஒன் என்ற புதிய அம்சத்தை கடந்த மே 2026ல் அறிவித்தது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த மெட்டா ஒன் பிளானுக்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஏஐ டூல்ஸ் மற்றும் போட்டோ மற்றும் வீடியோ உருவாக்கும் அம்சங்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்க்கு வருகிறது மெட்டா ஒன் பிளான் – அப்படி என்ன ஸ்பெஷல்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Jun 2026 19:36 PM IST

மெட்டா நிறுவனம் தங்களின் பிரீமியம் தன்மையை மேம்படுத்தத் தயாராகி வருகிறது. இது தொடர்பாக வெளியான தகவலின் படி மெட்டா ஒன் (Meta One) சப்ஸ்கிரிப்ஷனுக்கான சப்போர்ட் விரைவில் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் உள்ள பிரீமியம் வசதிகளை ஒரே திட்டத்தின் மூலம் பெற முடியும். நிறுவனம் மெட்டா ஒன் பிளஸ் மற்றும் மெட்டா ஒன் பிரீமியம் ஆகிய இரண்டு நிலைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஏஐ டூல்ஸ் மற்றும் போட்டோ மற்றும் வீடியோ உருவாக்கும் அம்சங்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் மெட்டா ஒன் பிளான்

வாட்ஸ்அப் குறித்த தகவல்களை வெளியிடும் WABetaInfo வெளியிட்ட தகவலின் படி, மெட்டா ஒன் சப்ஸ்கிரைப்ஷன் அம்சத்தை ஆண்ட்ராய்டு செயலியில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.26.23.10 என்பதில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதில் மெட்டா ஒன் சப்ஸ்கிரிப்ஷன் செலுத்தும் பயனர்கள், வாட்ஸ்அப் பிளஸ் உடன் தொடர்புடைய வசதிகள் கிடைக்கும். இந்த மெட்டா ஒன் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கான சில பிரீமியம் வசதிகளையும் அணுக முடியும்.

இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய அம்சம்! இனி 2 வாரங்களுக்கு முன்பே மெசேஜ்களை ஷெட்யூல் செய்யலாம்!

மெட்டா நிறுவனம் மெட்டா ஒன் என்ற புதிய அம்சத்தை கடந்த மே 2026ல் அறிவித்தது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த மெட்டா ஒன் பிளானுக்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. வாட்ஸ்அப்பில் சமீபத்தில் காணப்பட்ட அறிகுறிகள், இந்த மெட்டா ஒன் பிளான் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளத நமக்கு உணர்த்துகின்றன.

மெட்டா ஒன் பிளஸ்ஸில் இடம் பெறவிருக்கும் அம்சங்கள்

தற்போது வெளியான தகவல்களின்படி,மெட்டா ஒன் பிளஸ் பிளானின் விலை மாதத்திற்கு சுமார் 700 ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் பிளஸ் பலன்களுடன் கூடுதலாக, இத்திட்டம் மெட்டாவின் ஏஐ மூலம் இயங்கும் போட்டோ மற்றும் வீடியோ கிரியேட் செய்யும் டூல்களுக்கான ஆப்சனும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பயனர்கள் மெட்டாவின் ஏஐ அமைப்புகளைப் பயன்படுத்தி நேரடியாகப் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க முடியும்.

மேலும் வெவ்வேறு சேவைகளுக்காக தனித்தனியாக பிளான்கள சப்ஸ்கிரைப் செய்வதை விட, தனது சமூக வலைதளங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்குவதை மெட்டா நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதையும் படிக்க : RAM என்றால் என்ன.. ஸ்மார்ட்போன் வாங்கும்போது RAM எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

மெட்டா ஒன் பிரீமியம்

மேலும் மெட்டா ஒன் பிரீமியம் திட்டத்தின் விலை மாதத்திற்கு சுமார் ரூ.2,200 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இத்திட்டத்துடன் ஒரு மாத இலவச சோதனைக் காலமும் வழங்கப்படலாம். மெட்டா ஒன் பிரீமியம் ஆனது மெட்டா ஒன் பிளஸ் திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும். அத்துடன் மேம்பட்ட பகுத்தறியும் திறன், சிக்கலான பிராம்ப்ட்களையும் சிறப்பாகப் புரிந்துகொள்ளும் ஏஐ வசதிகள், அதிக அளவிலான ஏஐ பயன்பாட்டு வரம்புகள் மற்றும் இமேஜ் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதற்கான கூடுதல் கிரெடிட்கள் போன்ற கூடுதல் சிறப்பம்சங்களையும் இது வழங்கும்.

இது கண்டென்ட் கிரியேட்டர்கள், தொழில்முறைப் பயனர்கள் மற்றும் ஏஐ கருவிகளைத் தீவிரமாகப் பயன்படுத்துபவர்களுக்குக் கூடுதல் பலன்களை அளிக்கும். மெட்டா நிறுவனம் இத்திட்டங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், பீட்டாபதிப்பில் இவை இடம்பெற்றிருப்பது, விரைவில் இவை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us