எப்போதும் போனின் பிரைட்னஸை 100% அளவுக்கு வைத்திருக்கிறீர்களா? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?
நம் வெயிலில் பயணிக்கும்போது நம் ஸ்மார்ட்போனை பார்ப்பது சவாலாக இருக்கும். இதனால் நம்மில் பெரும்பாலும் போனின் பிரைட்னஸை 100 சதவிகிதம் வரை உயர்த்தி வருகிறோம். ஆனால் அப்படி செய்வது நம் உடலுக்கு பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத வாழ்க்கையை ஒருவரால் நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் உலகையே நம் உள்ளங்கைகளுக்குள் கொண்டு வந்துள்ளன. காலை விழித்தவுடன் தொடங்கி இரவு தூங்கும் வரை மணிக்கணக்கில் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகிறோம். ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதனை முறையாக பயன்படுத்துவது நம் உடல் நலனுக்கு நன்மை விளைவிக்கும். குறிப்பாக நம் ஸ்மார்ட்போனில் பிரைட்னஸை 100 சதவிகிதம் பயன்படுத்துவது நம் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நம் வெயிலில் பயணிக்கும்போது நம் ஸ்மார்ட்போனை பார்ப்பது சவாலாக இருக்கும். இதனால் நம்மில் பெரும்பாலும் போனின் பிரைட்னஸை 100 சதவிகிதம் வரை உயர்த்தி வருகிறோம். ஆனால் எப்போதும் பிரைட்னஸை 100 சதவிகிதம் அளவுக்கு பயன்படுத்துவது நம் கண்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திக்கும் View Once.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் மெட்டா!




கண்களுக்கு அதிக பாதிப்பு
போனில் பிரைட்னஸை 100 சதவிகிதம் அளவுக்கு வைத்திருப்பதன் காரணமாக நம் கண்கள் அதிக ஒளியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் நம் கண்களுக்கு எரிச்சல், கண் உலர்ந்து போதல், வலி, மங்கலான பார்வை தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம், மேலும் கண்களில் அதிக ஒளியை வைத்திருப்பதன் காரணமாக கண்களை இமைப்பது குறைகிறது. இதனால் கண்கள் வேகமாக உலர்ந்து சோர்வடையும். நீண்ட காலத்திற்கு இப்படியே தொடர்ந்தால் பார்வை திறன் குறைந்து கண் கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
தூக்கத்தைக் கெடுக்கும் புளூ லைட்
ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில் இருந்து வெளியாகும் புளூலைட் நம் கண்களை பாதிப்பதோடு தூக்கத்திலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக மெலட்டோனின் ஹார்மோன் உற்பத்தி குறையம். இதனால் இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய நிலை வரலாம். இதனால் பகல் நேரங்களில் சோர்வாக உணர்வீர்கள். இதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால் இரவு நேரங்களில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது நைட் மோட் அல்லது புளூலைட் ஃபில்டர் பயன்படுத்துவது நல்லது.
இதையும் படிக்க : இன்ஸ்டாகிராம் பிளஸில் இத்தனை சிறப்பு அம்சங்களா?.. முழு விவரம் இதோ!
இது தவிர நம் ஸ்மார்ட்போன் அதிக பிரைட்னஸில் இருக்கும்போது அதிக பவர் தேவைப்படும். இதனால் வெகு விரைவாக சார்ஜ் குறையும். இதனால் பேட்டரியின் ஆயுள் விரைவில் முடிவடையும். பேட்டரி வேகமாக காலியாகும். அடிக்கடி சார்ஜ் செய்வதால் வெப்பம் அதிகரித்து, பேட்டரி வீங்குதல் அல்லது பழுதடையும் அபாயமும் உள்ளது.