யுபிஐ மோசடிகளுக்கு செக்.. அசத்தல் அம்சம் அறிமுகம்.. என்ன தெரியுமா?
New Feature Introduced In UPI To Avoid Scam | யுபிஐ தொடர்பான மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான், யுபிஐ-ல் ஒரு அட்டகாசமான அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் சபைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, யுபிஐ (UPI – Unified Payment Interface) தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. இவ்வாறு தொடர்ந்து அதிகரிக்கும் சைபர் குற்றங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தான் யுபிஐ மோசடிகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யுபிஐ மூலம் நடைபெறும் மோசடிகளை சற்று குறைக்க முடியும் என கூறப்படுகிறது. அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மோசடிகளை தடுக்க யுபிஐ-ல் வந்த புதிய அம்சம்
இந்தியாவில் சமீப காலமாக அதிகரித்துள்ள ஒரு வகையான மோசடி தான் டிஜிட்டல் கைது மோசடி (Digital Arrest Scam). இந்த மோசடியில், வங்கி கணக்கில் பணம் வைத்துள்ள பொதுமக்களை டார்கெட் செய்யும் கும்பல்கள், குற்ற செயல்களில் ஈடுபட்டதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறி, அதிகாரிகளை போல பேசி டிஜிட்டல் கைது செய்து வைத்துள்ளதாக மிரட்டும்.
இதையும் படிங்க : லேப்டாப் கேமரா சிக்கலா?.. ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும்.. ஈசிய கேமரா செட் பண்ணலாம்!




அந்த கைதின்போது யாரையும் தொடர்ப்புக்கொள்ள கூடாது, வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என பல விதிகளை முன்வைக்கும். அதனை கேட்டு அச்சமடையும் நபர்களை ஏமாற்றி சிக்கலில் இருந்து விடுபட வேண்டும் என்றால் பணத்தை அனுப்ப கோரும். இவ்வாறு, யுபிஐ அல்லது வங்கி கணக்கின் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த கும்பல் தலைமறைவாகிவிடும். இந்த மோசடியில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் கோடி கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.
இனி அனைத்து தகவல்களும் தோன்றும்
இத்தகைய மோசடிகளை தடுக்கும் வகையில் தான் யுபிஐ-ல் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, யுபிஐ-ல் ஸ்கேன் செய்து ஒருவருக்கு பணம் செலுத்தும்போது பணத்தை பெறும் நபர் மற்றும் பணத்தை அனுப்பும் நபரின் முழு தகவலும் தெரியும். குறிப்பாக பணத்தை பெறும் நபரின் பெயர், வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்கள் திரையில் காண்பிக்கப்படும். இதன் மூலம் நீங்கள் பணம் அனுப்பும் யுபிஐ நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பதை உறுதி செய்துக்கொள்ள முடியும்.