உங்கள் வைஃபை இணைய வேகம் குறையுதா?.. சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!
Your Wi Fi Network Can Hack By Hackers | பலரும் தடையில்லாத மற்றும் அதிவேக இணைய சேவைக்காக வைஃபை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அந்த வைஃபையை திருடி வேறு ஒருவர் பயன்படுத்துவதற்கான ஆபத்துகள் உள்ளன. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய சூழலில் உலகமே உள்ளங்கையில் தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இணைய வசதி மூலம் பல கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவரை கூட மிக எளிதாக தொடர்புக்கொள்ள முடியும். வீட்டில் இருந்து ஷாப்பிங் செய்வது, உணவு ஆர்டர் செய்பது, திரைப்படம் பார்ப்பது என அனைத்து சேவைகளையும் பெற இணைய வசதி மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதற்காக பலரும் மொபைல் டேட்டாவை பயன்படுத்துகின்றனர்.
மொபைல் டேட்டாவில் குறிப்பிட்ட அளவு மட்டுமே டேட்டாவை பயன்படுத்த முடியும் என்ற சூழலில், தடையில்லாமல் இணைய சேவையை பயன்படுத்த பலரும் வைஃபை வசதியை பெறுகின்றனர். ஆனால், அந்த வைஃபை இணைய சேவை சத்தமில்லாமல் திருடப்படுவது குறித்து யாரும் கண்டுக்கொள்வதில்லை. இந்த நிலையில், வைஃபை இணைய சேவையை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இணைய வேகம் குறைவதற்கான முக்கிய காரணங்கள்
உங்கள் வீட்டில் எந்தவித காரணங்களும் இல்லாமல் திடீரென உங்களது வைஃபை இணைய வேகம் குறைந்தால் அதனை மிகவும் எளியதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம், இந்த சூழலில் உங்களுக்கு தெரியாமல் உங்கள் வைஃபை இணைய சேவையை வேறு ஒருவர் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இதேபோல வீட்டில் நள்ளிரவு நேரத்தில் நீங்கள் எந்த ஒரு மின்சாதன பொருட்களை பயன்படுத்தாத போதும், உங்களது வைஃபை ரவுட்டரில் இருக்கும் விளக்குகள் விட்டு விட்டு எரிந்தாலும் உங்களது வைஃபை நெட்வொர்க்கை வேறு ஒருவர் பயன்படுத்துகிறார் என்று அர்த்தம்.




இதையும் படிங்க : UPI : இனி விமானத்திலும் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்.. விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்!
நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் டேட்டா அளவை விட அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்றாலும் உங்களது வைஃபை டேட்டாவை வேறு ஒருவர் பயன்படுத்துகிறார் என்று அர்த்தம். தற்போது அனைத்தையும் மிக எளிதாக ஹாக் செய்ய முடிகிறது. அதன்படி, ஹேக்கர்கள் மிக எளிதாக உங்களது வைஃபையை ஹேக் செய்துவிடுவார்கள். இதன் காரணமாக உங்களது இணைய வேகம் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, வங்கி விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் திருடப்பட்டு மோசடி நடைபெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தடுக்க அதிரடி நடவடிக்கை.. விரைவில் வருகிறது ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்.. சிறப்புகள் என்ன என்ன?
எனவே உங்கள் வைஃபை இணைய சேவை குறையும்போது அது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.