AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Swiggy, Zomato-க்கு போட்டியாக களமிறங்கும் Flipkart.. விரைவில் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது!

Flipkart Soon To Launch Food Delivery Service | இந்தியாவில் ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், அவற்றுக்கு போட்டியாக பிளிப்கார்ட் தனது உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.

Swiggy, Zomato-க்கு போட்டியாக களமிறங்கும் Flipkart.. விரைவில் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Jul 2026 20:19 PM IST

உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனங்களில் ஒன்றாக உள்ளதுதான் பிளிப்கார்ட் (Flipkart). இந்த நிறுவனம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களை அவர்களது வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வருகிறது. பிளிப்கார்டில் வீட்டு உபயோக பொருட்கள், உடைகள், மலிகை பொருட்கள், அழகு சாதன பொருட்கள், மின்சாதன பொருட்கள் என அனைத்தும் வீடு தேடி டெலிவரி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பிளிப்கார்ட் மேலும் ஒரு சேவையையும் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் வாரங்களில் உணவு டெலிவரி சேவையை பிளிப்கார்ட் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உணவு டெலிவரி செய்யும் சேவையை அறிமுகம் செய்யும் பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் தளத்தில் மின்சாதன பொருட்கள் முதல் அழகு சாதன பொருட்கள் வரை அனைத்தும் உள்ளது. இந்த நிலையில் தான், உணவு டெலிவரி செய்யும் இந்த புதிய முயற்சியை பிளிப்கார்ட் கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் தான் அவற்றுக்கு போட்டியாக பிளிப்கார்ட் களமிறங்க உள்ளது.

இதையும் படிங்க : கார்களின் விலை உயர்வை அறிவித்த மாருதி சுசூகி – ரூ.30,000 வரை விலை உயரும் – காரணம் என்ன?

பிளிப்கார்ட் உணவு டெலிவரி சேவை – உறுதி செய்த சிஇஓ

பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, Moneycontrol-க்கு அளித்த நேர்காணலில் இது தொடர்பாக பேசியுள்ளார். அடுத்த ஒருசில வாரங்களில் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆரம்பக்கட்டத்தில் சோதனை முயற்சியாக இதனை மேற்கொள்ள உள்ளதாகவும், அது வெற்றிபெறும் நிலையில் அனைத்து நகரங்களிலும் உணவு டெலிவரி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவுக்கு பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி.. எவ்வளவு தெரியுமா?

பிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள அந்த சேவைக்கான செயலியின் பெயர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், அதன் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி இந்த சேவையை அதற்கான பிரத்யேக செயலி மூலமும் அல்லது பிளிப்கார்ட் செயலி மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us