AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவுக்கு பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி.. எவ்வளவு தெரியுமா?

Samsung Galaxy S25 Ultra Smartphone | உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ள பிளிப்கார்ட், தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவுக்கு பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி.. எவ்வளவு தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jul 2026 23:35 PM IST

உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு (Samsung Galaxy S25 Ultra Smartphone) அட்டகாசமான சலுகையை வழங்கியுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனை வங்கி சலுகைகள் மற்றும் இதர சலுகைகளை பயன்படுத்தி ரூ.75,000-க்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,29,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த பிளிப்கார்ட் சலுகையில் ரூ.54,000 சலுகையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் வழங்கும் சிறப்பு சலுகைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு சலுகை

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஒரு ஆண்டுக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டதாக இருந்தாலும், பெரும்பாலான பயனர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஸ்மார்ட்போனை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், பிளிப்கார்டின் இந்த சலுகையை பயன்படுத்துவதன் மூலம் மிக குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள முடியும்.

இதையும் படிங்க : ஜியோ vs ஏர்டெல்: குறைந்த கட்டணத்தில் 30 நாள் ரீசார்ஜ் பிளான் எது?

பிளிப்கார்ட் வழங்கும் உடனடி சலுகை ரூ.4,000

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு பிளிக்பார்ட் நிறுவனம் உடனடி சலுகையாக ரூ.4,000 வழங்குகிறது. சில கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் பட்சத்தில் இந்த சிறப்பு அம்சத்தை பெற முடியும். பழைய சாம்சங் ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்து இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் கூடுதலாக ரூ.10,000 பெற முடியும். இந்த நிலையில், சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் ஆகியவை சேர்த்து நல்ல விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : இரவு முழுவதும் உங்கள் போனை சார்ஜ் செய்வது சரியா? உண்மை என்ன?

சாம்சங்க் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா – சிறப்பு அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் டைனமிக் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இது தவிர 200 மெகாபிக்சல் கேமரா உள்ளிட்ட அம்சத்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us