AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அசைமென்ட் முதல் இமெயில் வரை… நம் வேலைகளை எளிதாக்கும் சிறந்த 5 ஏஐ சாட்பாட்கள்

செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம் இன்று நமது அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறி வருகிறது. மாணவர்களின் படிப்பு முதல் அலுவலகப் பணிகள் வரை பல்வேறு வேலைகளை விரைவாகவும் எளிதாகவும் செய்து முடிக்க ஏஐ கருவிகள் உதவுகின்றன. அன்றாட வேலைகளை மேற்கொள்ள சிறந்த 5 ஏஐ சாட்பாட்கள் குறித்து பார்க்கலாம்.

அசைமென்ட் முதல் இமெயில் வரை… நம் வேலைகளை எளிதாக்கும் சிறந்த 5 ஏஐ சாட்பாட்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Jul 2026 21:24 PM IST

செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம் இன்று நமது அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறி வருகிறது. மாணவர்களின் படிப்பு முதல் அலுவலகப் பணிகள் வரை பல்வேறு வேலைகளை விரைவாகவும் எளிதாகவும் செய்து முடிக்க ஏஐ கருவிகள் உதவுகின்றன. அசைன்மென்ட் எழுதுவது, பிரசன்டேஷன் தயாரிப்பது, இமெயில் உருவாக்குவது என பல்வேறு பணிகளில் ஏஐ சாட்பாட்கள் நமக்கு உதவுகின்றன. இந்த ஏஐ சாட்பாட்கள் நம் வேலையைக் குறைப்பதுடன், நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும். இந்த நிலையில் நம் வேலையை எளிமையாக்கும் 5 பிரபலமான ஏஐ சாட்பாட்கள் குறித்து பார்க்கலாம்.

1 .சாட்ஜிபிடி

மாணவர்கள் முதல் பணியாளர்கள் வரை பல்வேறு தரப்பினர் வரை சாட்ஜிபிடி பிரபலமானதாக இருக்கிறது. மாணவர்கள் கடினமான பாடங்களை எளிமையாக புரிந்துகொள்ளவும், தங்கள் பாடங்களுக்கான குறிப்புகளைத் தயாரிக்கவும், அசைன்மென்ட்களை முடிக்கவும், தேர்வுகளுக்குத் தயாராகவும் சாட்ஜிபிடி பெரிதும் கைகொடுக்கும். அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் இ-மெயில் எழுதுவது, கட்டுரைகள் உருவாக்குவது, நீண்ட கட்டுரைகளை சுருக்குவது, பிரசன்டேஷன்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்குவது மற்றும் புதிய வணிக யோசனைகளை பெறுவது போன்ற பணிகளுக்கும் இது பெரிதும் உதவும்.

இதையும் படிக்க :  இனி உங்கள் எக்ஸ் Feed-ல் அதிகம் நண்பர்கள் தான் இருப்பார்கள்.. விரைவில் வரும் புதிய அம்சம்!

2. கூகுள் ஜெமினி

கூகுள் நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு குறிப்பாக ஜிமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் டிரைவ் போன்ற சேவைகளை பயன்படுத்துபர்களுக்கு கூகுள் ஜெமினி பெரிதும் உதவும். புதிய இமெயில் உருவாக்க, ஆவணங்களை தெளிவாக புரிந்துகொள்ள, புதிய கண்டென்ட்களை உருவாக்குவது, தகவல்களை ஆய்வு செய்வது என இது நம் வேலைகளை எளிதாக்கும். குறிப்பாக அலுவலக பணியாளர்களுக்கு பெரிதும் உதவும்.

3. மைக்ரோசாஃப்ட் கோபைலட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கோபைலட் ஏஐ சாட்பாட் ஏஐ தொழில்முறை பணிகளில் பெரிதும் கைகொடுக்கும். குறிப்பாக மைக்ரோ சாஃப்ட் வேர்டு ஆவணங்களை மேம்படுத்துவது, பவர்பாயிண்ட் பிரசண்டேசன்களை உருவாக்குவது, எக்சல் டேட்டாக்களை உருவாக்குவதுஇமெயில்களை உருவாக்குவது போன்ற பல பணிகளுக்கு பெரிதும் உதவும்.

இதையும் படிக்க : பாதுகாப்புக்காக இந்தியாவின் அடுத்தக்கட்ட டெக்னாலஜி.. களமிறங்கும் குவாண்டம் தொழில்நுட்பம்!

4. கிளௌட் ஏஐ

நீண்ட ஆவணங்கள் மற்றும் எழுத்து பணிகளுக்கு கிளெளட் ஏஐ பெரிதும் உதவம். நீண்ட ஆவணங்களை விரைவாக படித்து புரிந்துகொள்வது, புதிய ஆவணங்களை உருவாக்குவது, கட்டுரைகளை திருத்துவது, ஆராய்ச்சிக்கான தகவல்களை பெறுதவு என இந்த கிளௌட் ஏஐ பெரிதும் உதவும். அதிக அளவிலான உரைகளுடன் பணிபுரியும் மாணவர்கள் மற்றும் தொழில்முறை பணியாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கலாம்.

5. பெர்ப்லெக்ஸிட்டி

விரைவான தகவல்களை பெற, பல்வேறு தலைப்புகளின் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இந்த ஏஐ பெரிதும் உதவும். மாணவர்கள், பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்பவர்களுக்கும் இந்த பெர்ப்லெக்ஸிட்டி ஏஐ கைகொடுக்கும்.

Follow Us