இனி உங்கள் எக்ஸ் Feed-ல் அதிகம் நண்பர்கள் தான் இருப்பார்கள்.. விரைவில் வரும் புதிய அம்சம்!
X Platforms New Update | எக்ஸ் தளத்தை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அதில் புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நண்பர்களை அதிகம் தேடும் புதிய அம்சம் ஒன்று அறிமுமாக உள்ளது.
உலக அளவில் வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகிய செயலிகளுக்கு பிறகு அதிக மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக உள்ளது தான் எக்ஸ் (X). இந்த செயலி ட்விட்டராக (Twitter) இருந்தபோதே இதற்கு பயனர்கள் ஏராளம். முற்றுலும் இலவச சேவைகளை வழங்கி வந்த டிவிட்டரை வாங்கிய உலக பணக்காரர் எலான் மஸ்க் (Elon Musk), அதற்கு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்து கட்டண முறை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், தற்போது புதிய அம்சம் அறிமுகம் செய்ய உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி உங்க எக்ஸ் தளத்தில் நண்பர்கள் நிறைந்திருக்க போறாங்க
எக்ஸ் தளத்தில் அதிகம் தெரியாதவர்களின் பதிவுகள் மற்றும் கமெண்டுகள் வருவது வழக்கமாக இருந்த நிலையில், அது மாற்றம் செய்யப்பட உள்ளது. அதாவது எக்ஸ் தளத்தில் நீங்கள் யாரை ஃபாலோ செய்கிறீர்கள், உங்களை யார் ஃபாலோ செய்கிறார்களோ அவர்களது பதிவுகள் தான் இனி உங்களுக்கு எக்ஸ் தளத்தில் தோன்றும். இந்த புதிய அம்சத்தை எக்ஸ் தளத்தின் தலைவர் நிகிதா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : வரலாற்றில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரோபோக்கள்!




புதிய அம்சத்தின் மூலம் வரவுள்ள முக்கிய மாற்றம் என்ன?
எக்ஸ் தளத்தில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த சிறிய மாற்றத்தின் மூலம், பயனர்கள் தெரியாதவர்கள் உடன் உரையாடுவது, தகவல்களை பகிர்வது போல் இல்லாமல் அதிகமாக தங்களது நண்பர்கள் உடன் தகவல்களை பகிர்வதை போல் இருக்கும். உதாரணமாக இன்ஸ்டாகிரம் செயலி எவ்வாறு நண்பர்கள் பார்க்கும் வீடியோக்களை உங்களது ஃபீடில் காட்டுமோ அதேபோல இனி எக்ஸ் தளமும் செயல்படும்.
இதையும் படிங்க : வாஷிங்மெஷினிலும் இருக்குது ஃபில்டர்… எப்படி சுத்தம் செய்வது தெரியுமா?
இந்த புதிய அம்சத்தின் மூலம் ஒரே சிந்தனை கொண்ட நபர்கள் நண்பர்களாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பயனர்கள் மத்தியில் கோரிக்கை இருந்து வந்த நிலையில், அதனை திர்த்து வைக்கும் விதமாக எக்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.