AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அறிமுகம் செய்த கையோடு AI Image அம்சத்தை நீக்கம் செய்த மெட்டா.. காரணம் என்ன?

Meta Removes AI Image Feature In Instagram | மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஏஐ புகைப்பட அம்சத்தை அறிமுகம் செய்த நிலையில், அதனை மீண்டும் நீக்கம் செய்துள்ளது.

அறிமுகம் செய்த கையோடு AI Image அம்சத்தை நீக்கம் செய்த மெட்டா.. காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jul 2026 00:10 AM IST

மெட்டா (Meta) நிறுவனம் இன்ஸ்டாகிராமில் (Instagram) ஏஐ புகைப்பட (Artificial Intelligence Photo) அம்சத்தை அறிமுகம் செய்த நிலையில், தற்போது அந்த அம்சத்தை நீக்கம் செய்துள்ளது. அந்த புதிய ஏஐ அம்சத்தை கடும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், மெட்டா இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த நிலையில், மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்த அந்த ஏஐ புகைப்பட அம்சம் என்ன, அதனை திரும்ப பெற்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏஐ புகைப்படம் அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா

மெட்டா நிறுவனம் சமீபத்தில் ஏஐ புகைப்பட அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சத்தின் மூலம் புகைப்படங்களை மிக எளிதாக எடிட் செய்யலாம். இந்த அம்சம் சிறப்பானதாக தானே இருக்கும், பிறகு ஏன் மெட்டா இந்த அம்சத்தை நீக்கம் செய்தது என்பது குறித்த கேள்வி எழலாம். காரணம், மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்த இந்த அம்சத்தில் ஒருவரின் இன்ஸ்டாகிராம் ஐடியை டேக் செய்து, அவரின் புகைப்படத்தை மிக எளிதாக எடிட் செய்ய முடியும். இந்த அம்சம் தான் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : ரீசார்ஜ் கட்டணங்கள் 15% வரை உயர வாய்ப்பு? அதிர்ச்சி தகவல்

ஏஐ புகைப்பட அம்சம் நீக்கம் செய்யப்பட காரணம் என்ன?

இந்த அம்சத்தில் எல்லா பொது கணக்குகளில் இருந்தும் புகைப்படத்தை எடுத்துக்கொள்ள முடியும். ஒருவேளை உங்களது புகைப்படங்களை வேறு ஒருவர் எடுத்து எடிட் செய்ய வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால், செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று அனுமதியை மறுக்கலாம். ஒருவேளை ஒருவர் இந்த ஏஐ புகைப்படம் அம்சத்தை பயன்படுத்தி பயனர்களின் புகைப்படங்களை எடிட் செய்தாலும், அது பயனர்களுக்கு காட்டாது.

இதையும் படிங்க : பூஜ்ஜியமாக குறைந்த யானை உயிரிழப்பு விகிதம்.. மாற்றத்தை ஏற்படுத்திய ஏஐ கண்காணிப்பு மையம்.. குவியும் பாரட்டுகள்!

இது பாதுகாப்பு குறைபாடாக கருதப்பட்ட நிலையில், பயனர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது. இதன் காரணமாக தான் மெட்டா தற்போது இந்த ஏஐ புகைப்பட அம்சத்தை நீக்கம் செய்துள்ளது.

Follow Us