ஆன்லைன் தொழில் செய்பவர்களுக்கு குட் நியூஸ்.. ஏஐ பிசினஸ் ஏஜெண்டை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்!
Meta Introduced AI Business Agent In WhatsApp | மெட்டா, வாட்ஸ்அப்பில் அவ்வப்போது சில முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தொழில் செய்பவர்களுக்காக பிசினஸ் ஏஐ ஏஜெண்ட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. இந்த செயலியை ஏராளமான இந்தியர்களும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெரும்பாலான இந்தியர்களின் அன்றாட வாழ்வின் முக்கிய அம்சங்களி ஒன்றாக வாட்ஸ்அப் மாறியுள்ளது. இவ்வாறு இந்திய பயனர்கள் மத்தியில் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மெட்டா நிறுவனம் இந்திய வாட்ஸ்அப் பயனர்களுக்காக பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தொழில்களுக்கான ஏஐ ஏஜெண்டை (Business AI Agent) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் சிறப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொழில்களுக்கான ஏஐ ஏஜெண்டை இந்தியாவில் அறிமுகம் செய்த வாட்ஸ்அப்
மெட்டா, வாட்ஸ்அப்பில் தொழிலுக்கான ஏஐ அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்களுக்கான ஏஜெண்ட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏஐ ஏஜெண்ட் 24 மணி நேரமும் உரையாடல்களை மேற்கொள்ளும். அதிலும் குறிப்பான அம்சம் என்னவென்றால் இந்த ஏஐ ஏஜெண்ட் அம்சத்தை முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான்.
இதையும் படிங்க : அமேசான் பிரைம் டே: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 50% வரை தள்ளுபடி – விவரம் இதோ




நீங்கள் ஏதேனும் தொழில் வைத்துள்ளீர்கள், அதற்காக பிசினஸ் வாட்ஸ்அப் கணக்கு வைத்துள்ளீர்கள் என்றால் தாராலமாக இந்த ஏஐ ஏஜெண்ட் அம்சத்தை பயன்படுத்தலாம். இந்த ஏஐ ஏஜெண்ட் வாடிக்கையாளர்கள் உங்களது தொழில் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு 24 மணி நேரமும் விடை அளிக்கும்.
இந்த ஏஜெ பிசினஸ் ஏஜெண்ட் எப்படி வேலை செய்யும்?
- நீங்கள் உங்கள் பிசினஸ் வாட்ஸ்அப் கணக்கில் ஏஐ ஏஜெண்டை பயன்படுத்த வேண்டும் என்றால் டூல்ஸ் டேப் பகுதிக்கு செல்ல வேண்டும்.
- அதில் உங்களுக்கு AI Agent என்ற ஆப்ஷன் தோன்றும்.
- அதனை தேர்வு செய்த பிறகு அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் வழிகாட்டுதல்களை படித்துவிட்டு செட் செய்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் குழந்தைகளுக்கு எதிரான விளம்பரங்கள்? மெட்டாவுக்கு மத்திய அரசு சம்மன்
மேற்குறிப்பிட்டபடி ஏஐ ஏஜெண்ட் அம்சத்தை செட் செய்த பிறகு ஆவணங்கள், புகைப்படங்கள், எடுத்துக்காட்டு பதில்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து உங்களது ஏஐ ஏஜெண்டை உங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக்கொள்ளலாம். ஆன்லைனில் தொழில் செய்யும் நபர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.