இந்த நிற கார்கள் அதிக வெப்பத்தை உரிஞ்சும்.. காரின் நிறத்திற்கு பின்னாள் இப்படி ஒரு விஷயமா?
These Colour Cars Absorbs More Heat Temperature | பெரும்பாலான நபர்கள் தங்களுக்கு பிடித்த நிறத்தில் கார் வாங்க வேண்டும் என்பதற்காக வெவ்வேறு நிறங்களில் வாங்குகின்றனர். ஆனால், கார்களின் நிறத்தை பொருத்து அவை வெப்பத்தை உரிஞ்சும் தன்மையும் மாறுபடும் என்பது உங்களுக்கு தெரியுமா.
காலம் செல்ல செல்ல புவி வெப்பமாவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக கோடைக்காலத்தில் பொதுமள்ள வெளியே செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட விலங்குகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அந்த வகையில், வீட்டிற்கு வெளியே, சாலைகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களும் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. வெளிநாடுகளில் வெப்பம் தாங்காமல் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பாதிப்புகளை சந்திப்பது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதற்கு வாகனங்களின் நிறம் மிக முக்கிய காரணியாக உள்ளது. இந்த நிலையில், எந்த நிற கார் விரைவில் அதிக வெப்பமாகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எந்த நிற கார் எளிதில் வெப்பமடையும்?
கார்களின் நிறம் பொருத்து அவை வெப்பமடைவது மாறுபடுகிறது. இதன் காரணமாக வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கார்களின் நிறத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
கறுப்பு நிற கார்
பலரும் கருப்பு நிற காரை வாங்க வேண்டும் என ஆசைப்படுவர். ஆனால், கார் நிறங்களிலேயே அதிக வெப்பத்தை உரிஞ்சும் நிறமாக கறுப்பு உள்ளது. இது 62 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உரிஞ்சுகிறது. இந்த நிற கார் அதிக வெப்பத்தை உரிஞ்சுவதன் காரணமாக ஏசி மிக கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.




பழுப்பு நிற கார்
பழுப்பு நிற கார் அதிகபட்சமாக 56 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உரிஞ்சுகிறது. இந்த கார் பார்ப்பதற்கு ப்ரீமியம் தோற்றத்தை கொடுக்கும். ஆனால், இது மிக எளிதாக வெப்பத்தை உரிஞ்சுவதால் கறுப்பு நிற காரின் ஏசிக்கு இணையாக இந்த காரின் ஏசியும் உழைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதையும் படிங்க : ஒரே சார்ஜில் 500கிமீ .. டாடாவின் சியாரா EV அறிமுகம்.. சிறப்பம்சங்கள் என்னென்ன?
சிவப்பு நிற கார்
சிவப்பு நிற கார் அதிகபட்சமாக 51 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உரிஞ்சும் தன்மையை கொண்டுள்ளது. இந்த நிற கார் மிக வேகமாக வெப்பமடைவதன் காரணமாக, அதனை குளிர்விக்க ஏசியின் திறன் அதிகம் தேவைப்படும்.
மஞ்சள் நிற கார்
பார்ப்பதற்கு பிரகாசமாக தோன்றும் இந்த மஞ்சள் நிற கார்கள் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உரிஞ்சுகின்றன. இந்த காரையும் குளிர்விக்க ஏசியின் திறன் அதிகமாக செயல்பட வேண்டும் என்பதால் இதில் மைலேஜ் சிக்கல் உள்ளது.
நீல நிற கார்
இந்த நீல நிற கார்கள் சாலைகளில் அரிதாகவே காணப்படும். இந்த நிற கார்கள் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உரிஞ்சும். இந்த நிற கார்கள் பார்ப்பதற்கு குளிர்ச்சியாக தோன்றினாலும், இவை அதிக வெப்பத்தை உரிஞ்சும் நிற கார்களாக உள்ளன.
இதையும் படிங்க : விவோ முதல் ரியல்மி வரை.. ரூ.7,000 வரை ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்திய நிறுவனங்கள்!
வெள்ளி நிற கார்
வெள்ளி நிற கார் அதிக சூரிய ஒளியை பிரதிலபிக்கிறது. அதாவது, இந்த நிற கார் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உரிஞ்சுகிறது. எனவே கறுப்பு, பழுப்பு உள்ளிட்ட நிறங்களுடன் ஒப்பிடுகையில் இந்த நிற காரில் ஏசியின் சுமை சற்று குறைகிறது.
வெள்ளை நிற கார்
இருப்பதிலேயே மிக குறைந்த அளவு வெப்பத்தை உரிஞ்சும் காராக இந்த வெள்ளை நிற கார் உள்ளது. இது 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உரிஞ்சுகிறது. இந்த நிற கார் அதிக சூரிய ஒளியை பிரதிபலிப்பதன் காரணமாக இதன் ஏசி சுமை குறைவாக உள்ளது.
காரில் ஏசி திறன் அதிகமாக தேவைப்படும்போது அது அதிக எரிபொருளை பயன்படுத்தும். எனவே அதிக வெப்பத்தை உரிஞ்சும் கார்கள், வெப்பத்தை அதிகமாக தக்கவைத்துக்கொள்வது மட்டுமன்றி, எரிபொருளை அதிகம் பயன்படுத்தி மைலேஜை குறைக்க வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.