AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விவோ முதல் ரியல்மி வரை.. ரூ.7,000 வரை ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்திய நிறுவனங்கள்!

Companies Hiked Their Smartphone Prices | ஏஐ நிறுவனங்களில் ஆதிக்கம் அதிகமாக உள்ளதன் காரணமாக மெமரி சிப்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இந்த காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.7,000 வரை உயர்த்தியுள்ளன. அது குறித்து பார்க்கலாம்.

விவோ முதல் ரியல்மி வரை.. ரூ.7,000 வரை ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்திய நிறுவனங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Jul 2026 22:55 PM IST

செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் அபார வளர்ச்சியால் பல்வேறு துறைகள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்கள் மட்டுமன்றி, மென்பொருள் விநியோகம் மற்றும் உற்பத்தியிலும் இந்த ஏஐ மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஏஐ நிறுவனங்களின் வருகையால் மெமரி சிப்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களுக்கான விலைகளை உயர்த்தும் முடிவுக்கு வந்துள்ளன. அந்த வகையில், நத்திங் (Nothing), விவோ (Vivo), ரியல்மி (Realme) ஆகிய நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை ரூ.7,000 வரை உயர்த்தியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்திய நிறுவனங்கள்

விவோ நிறுவனம் தனது 9 ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

ஸ்மார்ட்போன்  அறிமுக விலை  விலை உயர்வு   தற்போதைய விலை
விவோ X300 FE (125GB + 256GB) ரூ.79,999 ரூ.7,000 ரூ.86,999
விவோ X300 FE (125GB + 512GB) ரூ.89,999 ரூ.7,000 ரூ.96,999
விவோ V70 FE (8GB + 128GB) ரூ.37,999 ரூ.4,000 ரூ.41,999
விவோ வி70 FE (8GB + 256GB) ரூ.40,999 ரூ.5,000 ரூ.45,999
விவோ வி70 FE (12GB + 256GB) ரூ.44,999 ரூ.2,000 ரூ.46,999
விவோ டி5 எக்ஸ் (6GB + 128 GB) ரூ.18,999 ரூ.2,000 ரூ.24,999
விவோ டி5 எக்ஸ் (8GB + 128 GB) ரூ.20,999 ரூ.2,000 ரூ.26,999
விவோ டி5 எக்ஸ் (8GB + 256 GB) ரூ.22,999 ரூ.2,000 ரூ.28,999
விவோ டி4 லைட் (6GB + 128GB) ரூ.10,999  ரூ.4,000 ரூ.18,999
விவோ டி4 லைட் (8GB + 128GB) ரூ.16,999 ரூ.4,000 ரூ.20,999

இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்கள்.. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எக்ஸ் ஃபோல்டு 6 ஸ்மார்ட்போன்!

விலை உயர்த்தப்பட்ட நத்திங் ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்  அறிமுக விலை  விலை உயர்வு   தற்போதைய விலை
நத்திங் போன் 4ஏ (8GB + 128GB) ரூ.31,999 ரூ.2,000 ரூ.39,999
நத்திங் போன் 4ஏ (8GB + 256 GB) ரூ.34,999 ரூ.3,000 ரூ.43,999
நத்திங் போன் 4ஏ (126GB + 256GB) ரூ.37,999 ரூ.3,000 ரூ.46,999
நத்திங் போன் 4ஏ ப்ரோ (8GB + 256GB) ரூ.42,999 ரூ.2,000 ரூ.54,999
நத்திங் போன் 4ஏ ப்ரோ (12GB + 256GB) ரூ.45,999 ரூ.4,000 ரூ.59,999

விலை உயர்த்தப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்  அறிமுக விலை  விலை உயர்வு   தற்போதைய விலை
ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (8GB + 128GB) ரூ.46,999 ரூ.3,000 ரூ.49,999
ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (8GB + 256GB) ரூ.48,999 ரூ.4,000 ரூ.52,999
ரியல்மி 16 ப்ரோ பிளஸ் (12GB + 256GB) ரூ.52,999 ரூ.3,000 ரூ.55,999
ரியல்மி 16 (8GB + 128GB) ரூ.33,999 ரூ.1,000 ரூ.34,999
ரியல்மி 16 (8GB + 256GB) ரூ.36,999 ரூ.1,000 ரூ.37,999
ரியல்மி 16 (12GB + 256GB) ரூ.39,999 ரூ.1,000 ரூ.40,999
ரியல்மி 16 ப்ரோ (8GB + 128GB) ரூ.39,999 ரூ.2,000 குறைவு ரூ.37,999
ரியல்மி 16 ப்ரோ (8GB + 256GB) ரூ.42,999 ரூ.2,000 குறைவு ரூ.40,999
ரியல்மி 16 ப்ரோ (12GB + 256GB) ரூ.46,999 ரூ.3,000 குறைவு ரூ.43,999

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல்களின் அடிப்படையில் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us