AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gmail : ஸ்டோரேஜ் சிக்கலா?.. ஜிமெயிலில் தேவையற்ற மெயில்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி?

How To Delete Unwanted Messages In Gmail By Bulk | ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் சிக்கல் ஏற்படும்போது அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அத்தகைய சூழலில் ஜிமெயிலில் உள்ள தேவையற்ற மெயில்களை கிளியர் செய்வதன் மூலம் செயலியை தடையில்லாமல் பயன்படுத்த முடியும்.

Gmail : ஸ்டோரேஜ் சிக்கலா?.. ஜிமெயிலில் தேவையற்ற மெயில்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jun 2026 22:39 PM IST

ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது தான் ஸ்டோரேஜ் சிக்கல். காரணம், ஸ்மார்போனில் ஸ்டோரேஜ் நிறைந்துவிட்டது என்றால் ஸ்மார்ட்போன் செயல்படாமல் போய்விடும். இதன் காரணமாக ஸ்மார்ட்போன் பயனர்கள் கடும் சிரமத்தை சந்திக்க கூடும். இத்தகைய சிக்கல்களை சந்திக்க கூடாது என்றால், ஸ்டோரேஜை சீராக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். அந்த வகையில், ஸ்டோரேஜை மேம்படுத்த ஜிமெயிலில் மொத்தமாக இமெயில்களை டெலிட் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் நிரம்பிவிடும் ஜிமெயில் – பயனர்கள் சந்திக்கும் சிக்கல்

உலக அளவில் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் மிக முக்கிய செயலியாக உள்ளதுதான் ஜிமெயில் (Gmail). கடைகளுக்கு சென்றாலோ, ஏதேனும் செயலிகளை பதிவிறக்கம் செய்தாலோ தகவல்களை பகிர்ந்துக்கொள்ள ஜிமெயில் ஐடி கேட்கப்படுகிறது. அவ்வாறு ஜிமெயில் ஐடி கொடுப்பதன் மூலம், ஏராளமான மெயில்கள் வந்து குவிந்துவிடும். இதன் காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆனால், இந்த சிக்கல்களை சரிசெய்ய ஒரு தீர்வு உள்ளது.

இதையும் படிங்க : வெனிசுலா நிலநடுக்கம்: முன்பே எச்சரித்த கூகுள் – எப்படி பயன்படுத்துவது?

ஜிமெயிலில் மொத்தமாக மெயில்களை டெலிட் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் வெப் பிரவுசரில் ஜிமெயில் செயலியை திறக்க வேண்டும்.
  2. அதில் சர்ச் பாருக்கு சென்று Unsubscribe என டைப் செய்ய வேண்டும்.
  3. இப்போது Unsubscribe அம்சத்துடன் வணிக ரீதியிலான ஜிமெயில்கள் தோன்றும்.
  4. அதில் தோன்றும் அனைத்து மெயில்களும் தேவையற்றது என உங்களுக்கு தோன்றினால். மேலே இடது பக்கம் கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  5. அவ்வாறு செய்வதன் மூலம் அந்த பக்கத்தில் இருக்கும் அனைத்து மெயிகளும் தேர்வு செய்யப்படும்.
  6. அனைத்து இமெயில்களையும் தேர்வு செய்த பிறகு, மேலே கொடுக்கப்பட்டுள்ள டெலிட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : பயனர்களின் பாதுக்காப்பை மேம்படுத்த வாட்ஸ்அப் புதிய நடவடிக்கை.. விரைவில் வரும் புதிய அம்சம்!

மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி, உங்களுக்கு தேவை இல்லாத வணிக ரீதியான மெயில்களை சுலபமாக டெலிட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us