70% இந்தியர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போனை விற்பனை செய்வதில்லை.. காரணம் என்ன தெரியுமா?
Indians Are Not Ready To Sell Their Smartphones | 70 சதவீத இந்தியர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தங்களது தனிப்பட்ட தகவல்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக அவர்கள் பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில்லை என கூறியுள்ளனர்.
தற்போதைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையிலும் இருக்கும் முக்கிய அம்சமாக ஸ்மார்ட்போன் (Smartphone) உள்ளது. தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படும் நிலையில், அது மனிதர்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்பாடு மனிதர்கள் மத்தியில் பரவலாக காணப்படும் நிலையில், பெரும்பாலான இந்தியர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. அது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
70 சதவீதம் இந்தியர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்பதில்லை
ஒரு ஸ்மார்ட்போனின் ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும். அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நபர் என்றால் இன்னும் சில ஆண்டுகள் கூடுதலாக பயன்படுத்தலாம். அதன் பிறகு நிச்சயம் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். புதிய ஸ்மார்ட்போன் வாங்கும்போது, பழைய ஸ்மார்ட்போனை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான இந்தியர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போனை விற்பனை செய்வதே இல்லையாம்.
இதையும் படிங்க : WhatsApp : ஹோம் ஸ்கிரீனில் இருந்த வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்.. விரைவில் வரும் அட்டகாசமான அம்சம்!
இந்தியர்கள் பழைய ஸ்மார்ட்போனை விற்காதது ஏன்?
இது தொடர்பாக Cashify, நடத்திய ஆய்வில் 70 சதவீதம் இந்தியர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில்லை என தெரிய வந்துள்ளது. சுமார் 8,000 பேர் இந்த அய்வில் பங்கேற்ற நிலையில், அவர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் என்ற அச்சத்தில் பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யாமல் வைத்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : உங்க கிட்ட பழைய போன் இருக்கா? அத ஈஸியா CCTV கேமராவா மாத்தலாம்! எப்படி தெரியுமா?
தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி ஒருவரின் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்கள் மற்றும் விவரங்களை மிக எளிதாக திருடிவிட முடிகிறது. இதன் காரணமாக தான் பலரும் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். பாதுகாப்பு காரணங்கள் காரணமாக சிலர் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யாமல் இருக்க சிலர் குறைந்த விலைக்கு பழைய ஸ்மார்ட்போன்களை கேட்பதால் விற்பனை செய்யாமல் உள்ளனர்.
இத்தகைய மனநிலை இந்தியர்கள் மத்தியில் நிலவி வரும் சூழலில், இந்தியாவில் பழைய ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்துள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



