AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்க கிட்ட பழைய போன் இருக்கா? அத ஈஸியா CCTV கேமராவா மாத்தலாம்! எப்படி தெரியுமா?

நம் வீடுகளில் பயன்படுத்தாமல் இருக்கும் பழைய ஸ்மார்ட் போன் கேமராக்களை நாம் சிசிடிவி கேமராக்களாக பயன்படுத்த முடியும். அதற்கு நம்மிடம் வைஃபை இணைப்பு இருந்தால் போதும் இதற்கான செலவு மிக குறைவாக இருக்கும். அது எப்படி என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

உங்க கிட்ட பழைய போன் இருக்கா?  அத ஈஸியா CCTV கேமராவா மாத்தலாம்! எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Jun 2026 16:48 PM IST

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் வீட்டை பாதுகாக்க பலரும் சிசிடிவி கேமராக்களை பொறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கான செலவுகள் அதிகம் என்பதால் எல்லோராலும் சிசிடிவி கேமராக்களை பொறுத்த முடியாது. இந்த நேரத்தில் நம் வீடுகளில் பயன்படுத்தாமல் இருக்கும் பழைய ஸ்மார்ட் போன் கேமராக்களை நாம் சிசிடிவி கேமராக்களாக பயன்படுத்த முடியும். அதற்கு நம்மிடம் வைஃபை இணைப்பு இருந்தால் போதும் இதற்கான செலவு மிக குறைவாக இருக்கும். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

உங்கள் பழைய ஸ்மார்ட்போனை சிசிடிவி கேமராவாக மாற்றுவது எப்படி?

நம்மிடம் உள்ள பழைய ஸ்மார்ட்போனை சிசிடிவி கேமராவாக மாற்ற சில அடிப்படை பொருட்கள் இருந்தால் போதும்.

  • கேமரா நன்றாக வேலை செய்யும் ஒரு ஸ்மார்ட்போன்.
  • வீடியோ பார்க்க மற்றொரு ஸ்மார்ட்போன்.
  • நல்ல வைஃபை இணைப்பு
  • சார்ஜர் மற்றும் மின்சார இணைப்பு
  • மொபைலை நிலையாக வைக்க ஸ்டாண்ட் அல்லது மவுண்ட்

லைவ் வீடியோ ரெக்கார்டிங்கிற்கு அதிக மின்சாரம் தேவைப்படும் என்பதால், ஸ்மார்ட்போன் எப்போது சார்ஜருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். நம் ஸ்மார்ட்போனை சிசிடிவி கேமராவாக பயன்படுத்த பல செயலிகள் உதவுகின்றன. அதில் மக்களிடையே மிகவும் பிரபலமான செயலி ஆல்ஃபிரெட் கேமரா (AlfredCamera). இந்த செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் செயல்படும்.

இதையும் படிக்க : வாட்ஸ்அப்க்கு வருகிறது மெட்டா ஒன் பிளான் – அப்படி என்ன ஸ்பெஷல்?

எப்படி பயன்படுத்துவது?

  • உங்கள் பழைய மொபைலிலும் நீங்கள் தற்போது பயன்படுத்தும் மொபைலிலும் ஆல்ஃபிரெட் கேமரா செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
  • இரண்டு போன்களிலும் ஒரே கூகுள் அக்கவுண்ட் மூலம் லாகின் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • மேலும் ஆல்ஃபிரெட்கேமரா செயலியில் பழைய போனில் கேமரா எனவும், நாம் பயன்படுத்தும் போனில் வியூவர் எனவும் குறிப்பிட வேண்டும்.
  • இதன் பிறகு பழைய போனில் லைவ் வீடியோ ரெக்கார்டாக தொடங்கும். அந்த காட்சிகளை தற்போதைய மொபைலில் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும்.

இந்த செயல்களில் மிகவும் முக்கியமானது பழைய போனை வைக்கப்படும் இடம் தான். வீட்டின் பிரதான நுழைவு வாயிலில், ஹால் பகுதியில் அல்லது மதிப்புமிக்க பொருட்கள் உள்ள அறையில், குழந்தைகள் அல்லது முதியவர்கள் உள்ள இடங்களில் வைக்கலாம்.

உயரமான இடத்தில் வைத்தால் அதிக பகுதியை கண்காணிக்க ஏதுவாக இருக்கும். மேலும் மின் இணைப்பு அருகில் இருப்பது நல்லது. குறிப்பாக வெயில் படும் இடங்களில் வைக்காமல் இருப்பது சிறந்தது. வெயில் படும் இடங்களில் வைத்தால் அதன் செயல்திறன் பாதிக்கும்.

இதையும் படிக்க : எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸின் புதிய அம்சம் – எப்படி பயன்படுத்துவது?

எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது?

  • எப்பொழுதும் இணைய இணைப்பு இருப்பது அவசியம்.
  • வலுவான வைஃபை பாஸ்வேர்டு பயன்படுத்த வேண்டும்.
  • Two-Factor Authentication வசதியை பயன்படுத்த வேண்டும்.
  • ஆல்ஃபிரெட் கேமரா செயலியை அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டும்.
  • லாகின் விவரங்களை மற்றவர்களுடன் பகிரக் கூடாது.

Follow Us