பவர் பேங்க் வாங்கபோறீங்களா? சரியானதை தேர்வு செய்வது எப்படி?
மார்க்கெட்டில் பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அதில் நமக்கு எது சரியாக இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். குறிப்பாக பவர் பேங்க் வாங்கும்போது பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம். பவர் பேங்க் வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் என்பது நம் வாழ்க்கையில் இரண்டற கலந்து விட்டது. ஸ்மார்ட்போன் தான் உலகையே நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக வேலை, கல்வி, பொழுதுபோக்கு, வங்கி சேவைகள் என அனைத்திற்கும் ஸ்மார்ட்போன் மிகவும் அவசியம். எப்பொழுதும் நம்முடன் இருக்கும் ஸ்மார்ட்போனில் உள்ள பிரச்னை அதன் சார்ஜ் விரைவில் குறைவது தான். குறிப்பாக நம் பயணங்களின் போது சார்ஜ் குறையும்போது நமக்கு கைகொடுப்பது பவர் பேங்க். அடிக்கடி பயணிப்பவர்களுக்கு பவர் பேங்க் முக்கிய கருவியாக மாறியுள்ளது. ஆனால் சரியான பவர் பேங்க்கை தேர்வு செய்வது அவசியம்.
ஆனால் மார்க்கெட்டில் பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அதில் நமக்கு எது சரியாக இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். குறிப்பாக பவர் பேங்க் வாங்கும்போது பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம். பவர் பேங்க் வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க : யூடியூபில் இனி ஏஐ வீடியோக்கள் குறித்த கவலை இல்லை.. அசத்தல் அம்சம் அறிமுகம்!
10,000mAh திறன் கொண்ட பவர் பேங்க்
பவர் பேங்க்கின் திறன் mAh என்ற அளவீட்டில் குறிப்பிடப்படுகிறது. ஒரு பவர் பேங்க் எவ்வளவு பவரை சேமித்து வைத்திருக்க முடியும் என்பதை இந்த அளவீடு நமக்கு சொல்லும். குறிப்பாக 10,000mAh திறன் கொண்ட பவர் பேங்க் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இந்த வகை பவர் பேங்க்கை நம் பேக்கில் அல்லது பாக்கெட்டில் எடுத்து செல்லக்கூடிய அளவில் இருக்கும். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை ஒன்று அல்லது 2 முறை வரை முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். தினசரி அலுவலக பயன்பாடு மற்றும் குறுகிய பயணங்களுக்கு இந்த வகை பவர் பேங்க் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.
20,000mAh திறன் கொண்ட பவர் பேங்க்
அதிக நேரம் வெளியே இருப்பவர்கள் அல்லது தொடர்ந்து மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு 20,000mAh திறன் கொண்ட பவர் பேங்க் சிறந்த தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த திறன் கொண்ட பவர் பேங்க் மூலம் ஸ்மார்ட்போன்களை பல முறை சார்ஜ் செய்ய முடியும். போன் மட்டும் இல்லாமல் இயர் பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச், டேப்லெட் போன்றவற்றையும் சார்ஜ் செய்ய முடியும். இது அடிக்கடி நீணட பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியுமா?
லேப்டாப் உள்ளிட்ட அதிக பவர் தேவைப்படும் பொருட்களை சார்ஜ் செய்யும்போது 20,000 mAhக்கும் அதிக திறன் கொண்ட பவர் பேங்க்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கும். மேலும் யுஎஸ்பி டைப் சி, யுஎஸ்பி பவர் டெலிவரி சப்போர்ட் கொண்ட மாடல்களை வாங்குவது அவசியம். இது லேப்டாப் போன்ற அதிக பவர் தேவைப்படும் பொருட்களை சார்ஜ் செய்ய மிகவும் அவசியம்.
இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திக்கும் View Once.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் மெட்டா!
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட பவர் பேங்க் நம் நேரத்தை மிச்சப்படுத்தும். இதன் மூலம் நம் ஸ்மார்ட் போன்களை குறைவான நேரத்திலேயே சார்ஜ் செய்ய முடியும். ஒரே நேரத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட போன்களை சார்ஜ் செய்ய அதற்கு ஏற்ப பல சார்ஜிங் போர்ட்கள் கொண்ட பவர் பேங்க்குகள தேர்வு செய்வது அவசியம். மேலும் பவர் பேங்க்கில் எவ்வளவு சார்ஜ் உள்ளது என்பதை அறிய எல்இடி அல்லது டிஜிட்டல் இன்டிகேட்டர்கள் அவசியம். இதன் மூலம் எப்போது ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.



