வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திக்கும் View Once.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் மெட்டா!
Meta To Introduce View Once Option For WhatsApp Messages | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது குறுஞ்செய்திகளுக்கான View Once என்ற ஆப்ஷனை அறிமுகம் செய்ய உள்ளது.
மெட்டா (Meta) நிறுவனம் தனது வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook) ஆகிய செயலிகளில் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுமட்டுமன்றி, பல்வேறு முக்கிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மெட்டா, இன்ஸ்டாகிராம் செயலியில் End-To-End Encryption அம்சத்தை நீக்கம் செய்தது. இதனால் பாதுகாப்பு குறைந்ததாக பயனர்கள் கவலை அடைந்தனர். என்னதான் இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பை மெட்டா நிறுவனம் குறைத்திருந்தாலும், வாட்ஸ்அப்பில் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது. அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பில் பாதுகாப்புக்காக மேலும் ஒரு அம்சம்
வாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்புக்காக மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் View- Once என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணியில் மெட்டா இறங்கியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் ஏற்கனவே View Once என்ற அம்சம் உள்ளது. இது புகைப்படங்களுக்கான அம்சமாக உள்ள நிலையில், பலரும் அதனை பரவலாக பயன்படுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் தான், புகைப்படங்களுக்கு இருப்பதை போலவே குறுஞ்செய்திகளுக்கு இந்த பாதுகாப்பு அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் 2026.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. எப்போது வரை?




இந்த View One ஆப்ஷன் எப்படி செயல்படும்?
- பயனர்கள் வழக்கம் போல தாங்கள் யாருக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டுமோ அவர்களின் உரையாடலுக்கு சென்று செய்தியை டைப் செய்ய வேண்டும்.
- பிறகு குறுஞ்செய்தியை அனுப்ப Send பட்டணை சிறிது நேரம் அழுத்த வேண்டும்.
- அப்போது சில ஆப்ஷன்கள் தோன்றும். அவற்றில் View Once என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு குறுஞ்செய்தியை பெறுபவருக்கு அந்த தகவல் View Once ஆக சென்று சேரும்.
இதையும் படிங்க : கூகுளுக்கே டஃப் கொடுக்கும் தேடுபொறிகள்.. பாதுகாப்புக்கு கேரண்டி.. லிஸ்ட் இதோ!
இந்த அம்சத்தின் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும்போது அதனை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அந்த குறுஞ்செய்தியில் அனுப்பட்ட தகவல் பாதுகாப்பாக இருக்கும். இந்த அம்சத்தை வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாகவும், இது விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.