AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கூகுளுக்கே டஃப் கொடுக்கும் தேடுபொறிகள்.. பாதுகாப்புக்கு கேரண்டி.. லிஸ்ட் இதோ!

Search Engines Equivalent To Google | உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் முதன்மை தேடுபொறியாக கூகுள் உள்ளது. ஆனால், கூகுகளை விட சிறந்த சேவை மற்றும் பாதுகாப்பு வழங்கக்கூடிய சில தேடுபொறிகள் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கூகுளுக்கே டஃப் கொடுக்கும் தேடுபொறிகள்.. பாதுகாப்புக்கு கேரண்டி.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Jun 2026 19:05 PM IST

முன்பெல்லாம் ஏதேனும் ஒரு விஷயம் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்களை படிக்க வேண்டும். ஆனால், தற்போது அதற்கான தேவை இல்லை. மிக எளிதாக சர்ஜ் இன்ஜின்களில் (Search Engines) தேடி தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அவை மிக விரைவாகவும், அதிகமான தகவல்களையும் தருகின்றன. பெரும்பாலான மக்கள் கூகுள் (Google) நிறுவனத்தின் சர்ஜ் இன்ஜினை தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், கூகுளை விட சிறப்பாக செயல்படக்கூடிய சில சர்ஜ் இன்ஜின்கள் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கூகுளை விட சிறப்பாக செயல்படும் 6 சர்ச் இன்ஜின்கள்

கூகுகளை விட சிறப்பாக செயல்படக்கூடிய சர்ச் இன் ஜிங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

DuckDuckGo

தனி உரிமை மற்றும் டேட்டா பாதுகாப்பிற்கு பலரின் முதன்மை தேர்வாக உள்ளது DuckDuckGo தான். இந்த தேடுபொறி நமது தேடல் வரலாற்றை எந்தவித காரணங்களுக்காகவும் ஆராய்வது கிடையாது. இந்த தேடுபொறியை நாம் பயன்படுத்தினால், நாம் தேடும் வார்த்தைக்கு மட்டுமே விளம்பரங்கள் வருமே தவிர தனிப்பட்ட நடவடிக்கைகளை கவனித்து அல்லது தகவல்களை சேகரித்து அதற்கு ஏற்ப இதில் விளம்பரங்கள் வராது.

Brave

DuckDuckGo தேடுபொறியை போலவே பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள தேடுபொறியாக உள்ளதுதான் Brave Search. இந்த தேடுபொறியில் உள்ள Goggles என்ற அம்சத்தின் மூலம் நமக்கு தேவையான தொழில்நுட்ப இணையதளங்கை மட்டுமே விடையாக பெற முடியும். ஒருவேளை செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் வசதி தேவை இல்லை என்றால் அதனையும் அணைத்து வைத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : ஜியோமி 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Startpage

கூகுள் காட்டுவதை போலவே துல்லியமான விடைகள் வேண்டும் ஆனால், உங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படக்கூடாது என நீங்கள் நினைக்கிறீர்களா. அப்போது உங்களுக்கான சரியான தேர்வு தான் Startpage. இந்த தேடுபொறி கூகுளிடம் இருந்து தகவல்களை நேரடியாக வாங்கும் நடுத்தர கருவி போல செயல்படும். இது உங்களின் உண்மையான அடையாளத்தை முற்றிலும் மறைத்துவிடும்.

இதையும் படிங்க : ஏன் 5ஜியால் போன் பேட்டரி வேகமாக காலியாகுது தெரியுமா? எப்படி தவிர்ப்பது?

Ecosia

இயற்கையை நேசிப்பவர்களுக்கான சிறந்த  தேடுபொறியாக உள்ளதுதான் Ecosia. இவர்கள், தங்களின் தேடுபொறி மூலம் வரும் வருமானத்தை வைத்து உலகம் முழுவதும் மரங்களை நட்டு இயற்கையை காத்து வருகின்றனர். சில நிமிட தேடல் மூலம் இயற்கையை பாதுகாக்க விரும்பும் நபர்கள் இதனை பயன்படுத்தலாம்.

Follow Us