ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் செயலிகளுக்கு Plus அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Plus Feature For Meta Apps | ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய செயலிகளுக்கு தாய் நிறுவனமாக மெட்டா உள்ளது. இந்த நிறுவனம், இந்த செயலிகளில் தொடர்ந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது பிளஸ் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
உலக அளவில் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் முக்கிய சமூக ஊடக செயலிகளாக வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் ஃபேஸ்புக் (Facebook) ஆகிய செயலிகள் உள்ளன. இந்த செயலிகளுக்கு தாய் நிறுவனமாக மெட்டா (Meta) நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது செயலிகளில் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது தனது செயலிகளில் பிளஸ் சந்தா அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சந்தா அம்சம் உலகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செயலிகளுக்கு பிளஸ் அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா
இதுவரை இலவச செயலிகளாக இருந்து வந்த வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் தற்போது கட்டண செயலிகளாக மாறியுள்ளன. அதாவது, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த செயலிகளை கட்டணம் செலுத்தாமலும் பயன்படுத்தலாம். ஆனால், கட்டணம் செலுத்தும் நபர்களுக்கு கூடுதலாக சில சிறப்பு அம்சங்கள் கிடைக்கும்.
இதையும் படிங்க : ரூ.51-க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் கால்கள்.. தினமும் 2ஜிபி நெட்.. BSNL தரும் சூப்பர் திட்டம்!




பிளஸ் சந்தாக்களின் கட்டணங்கள்
- 3.99 டாலர்களுக்கு இன்ஸ்டாகிராம் பிளஸ் சந்தா வழங்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.387 ஆகும்.
- 3.99 டாலர்களுக்கு ஃபேஸ்புக் பிளஸ் சந்தா வழங்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.387 ஆகும்.
- 2.99 டாலர்களுக்கு வாட்ஸ்அப் பிளஸ் சந்தா வழங்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.290 ஆகும்.
உலக அளவில் இந்த சந்தா முறை பின்பற்றப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் தனது சந்தா கட்டணத்தை மெட்டா இன்னும் அறிவிக்காமல் உள்ளது.
இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஓப்போ ரெனோ 16 சீரீஸ்!
பிளஸ் அம்சம் – சிறப்புகள் என்ன என்ன?
இன்ஸ்டாகிராமை பொருத்தவரை யாரெல்லாம் ஸ்டோரியை மீண்டும் பார்த்தார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். ஃபாலோவர்ஸ்கள் பார்ப்பதற்கு முன்னதாக ஸ்டோரியை பார்க்க பிரிவியூ அம்சம் வழங்கப்படும். அதுமட்டுமன்றி அனிமேட்டட் இதயம் உள்ளிட்ட மேலும் சில சிறப்பு அம்சங்களும் இன்ஸ்டாகிராமில் இடம்பெறும். இதேபோன்ற அம்சங்கள் தான் ஃபேஸ்புக் பிளஸ் சந்தாவுக்கும் வழங்கப்படும்.
இந்த பிளஸ் அம்சத்தில் வாட்ஸ்அப் பயனர்கள் கஸ்டம் தீம், தனித்துவமான ரிங்க்டோன், பிரீமியம் ஸ்டிக்கர்ஸ், கூடுதல் சாட் பின்கள் ஆகியவற்றை பெறுவர்.