பணப்பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை – அனைத்து வேலைகளையும் செய்யும் ஏஐ
AI Super Apps : பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது மனிதர்களுக்குப் பதிலாக தானாக முடிவெடுத்து பொருட்கள் வாங்கும் புதிய ஏஐ சூப்பர் செயலிகளை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக மக்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான தேவைகளை ஏஐ மூலம் நிர்வகிக்கும் வகையில் மாற்றங்களை செய்து வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது. சீனாவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது மனிதர்களுக்குப் பதிலாக தானாக முடிவெடுத்து பொருட்கள் வாங்கும் புதிய ஏஐ சூப்பர் செயலிகளை உருவாக்கி வருகின்றனர். இந்த மாற்றம் தற்போது உலக தொழில்நுட்ப துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அலிபாபா, டென்சென்ட் மற்றும் பைட் டான்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏஐ அடிப்படையிலான புதிய சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றன. குறிப்பாக விசாட் போன்ற செயலிகள் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான தேவைகளை ஏஐ மூலம் நிர்வகிக்கும் வகையில் மாற்றங்களை செய்து வருகின்றன.
நமக்காக அனைத்து வேலைகளையும் செய்யும் ஏஐ
அதன் படி சீனாவில் சில நகரங்களில் மக்கள் தங்களின் ஏஐ செயலிகளிடம் ஒரு நல்ல காபி ஆர்டர் செய், உணவு ஆர்டர் செய், டாக்சி புக் பண்ணு, ஷாப்பிங் பண்ணு என குரல் மூலமாகவோ அல்லது மெசேஜ் மூலமாகவோ சொன்னால் ஏஐ தானாவகவே பொருட்களை தேர்வு செய்து ஆர்டர் செய்யும். அந்த பொருட்கள் நம் வீட்டுக்கே வந்து விடும். ஒவ்வொன்றையும் பாரத்து பார்த்து வாங்க வேண்டியதில்லை. நமக்கு தேவையானவற்றை தெளிவாக சொன்னாலே போதும்.
இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் ஆன்லைனில் இருப்பவர்களை தெரிந்துகொள்ள புதிய வசதி – பிரைவசி பாதிக்குமா?




உதாணமாக ஒருவர் ஸ்பெஷல் காஃபி வேண்டும் என ஏஐ செயலியிடம் கூறிய போது அது தானாகவே வினிகர் சுவைக கொண்ட வித்தியாசமான காஃபியை ஆர்டர் செய்திருக்கிறது. சில நேரங்களில் தவறான முடிவுகள் வந்தாலும், ஏஐ தற்போது சீன மக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது.
வெளியான தகவலின் படி, சீனாவில் ஏற்கனவே 60 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏதாவது ஒரு வகையான ஏஐ ஏஜென்ட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏஐ ஏெண்ட்ஸ் என்பது மனிதர்களின் நேடி தலையீடு இல்லாமல் அவர்களுக்கு பதிலாக வேலை செய்யும் தொழில்நுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : AI கொடுக்கப்போகும் ஷாக்.. லட்சக்கணக்கான வேலைகளுக்கு ஆப்பு.. அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கை!
சீனாவில் இண்டர்நெட் உலகில் கடந்த 20 ஆண்டுகளில் 3 முக்கிய கட்டங்களை கடந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் மக்கள் இணைய தேடல் முக்கியமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் காலகட்டத்தில் அது சூப்பர் ஆப்களாக மாறியது. தற்போது விசாட் (Wechat) மெசேஜிங், பணப்பரிவர்த்தனை, ஷாப்பிங், வீடியோ, பொழுதுபோக்கு, உணவு டெலிவரி என அனைத்தையும் ஒரே செயலியில் வழங்கும் சூப்பர் ஆப்பாக மாறியது.
இந்தியாவில் விசாட் போன்ற சூப்பர் ஆப் இல்லை என்றாலும் பணப்பரிவர்த்தனை, ஷாப்பிங், பயணம், பொழுதுபோக்கு போன்றவற்றை ஒரே தளத்தில் வழங்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சீனாவில் தற்போது ஏஐ ஏஜென்ட்ஸ் மற்றும் முழுமையான ஏஐ சூப்பர் ஆப் போன்ற சூழல் இன்னும் இந்தியாவில் உருவாகவிலலை.