AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் கிடையாது… கூகுள் அதிரடி நடவடிக்கை – காரணம் என்ன?

New Gmail Storage Rule : புதிதாக ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுண்ட் உருவாக்கும் பயனர்களுக்கு ஆரம்பத்தில் வெறும் 5ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்படும். முழுதாக 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் பெற வேண்டுமெனில், பயனர் தனது போன் நம்பரை வெரிஃபை செய்ய வேண்டும் என கூகுள் தெரிவித்துள்ளது.

இனி 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் கிடையாது… கூகுள் அதிரடி நடவடிக்கை – காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 15 May 2026 21:27 PM IST

கூகுள் தனது ஜிமெயில் மற்றும் கூகுள் அக்கவுண்ட் பயனர்களுக்கு புதிய முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுவரை புதிய கூகுள் அக்கவுண்ட்டை உருவாக்கும் அனைவருக்கும் ஜிமெயில், கூகுள் டிரைவ் மற்றும் கூகுள் போட்டோஸ் சேவைகளுக்காக 15ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜை வழங்கி வந்தது. இந்த நிலையில் தற்போது கூகுள் அந்த விதிகளில் மிகப்பெரிய மாற்றம் செய்துள்ளது. அதன்படி இனி 15ஜிபி ஸ்டோரேஜை பெற போன் நம்பர் வெரிஃபிகேஷன் அவசியம் என தெரிவித்துள்ளது.

இனி 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் கிடையாது

புதிய விதிகளின் படி, புதிதாக ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுண்ட் உருவாக்கும் பயனர்களுக்கு ஆரம்பத்தில் வெறும் 5ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்படும். முழுதாக 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் பெற வேண்டுமெனில், பயனர் தனது போன் நம்பரை வெரிஃபை செய்ய வேண்டும் என கூகுள் தெரிவித்துள்ளது. அதாவது போன் நம்பரை வெரிஃபை செய்த பிறகு மீதமுள்ள 10ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படும். இது ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் போட்டோஸ் ஆகியவற்றுக்கு பொருந்தும்.

இதையும் படிக்க : ஸ்னாப்சாட்டை காப்பி அடித்த இன்ஸ்டாகிராம்?.. புதிய இன்ஸ்டன்ட்ஸ் அம்சம் எப்படி உள்ளது?

கூகுள் தெரிவித்த தகவலின் படி போலி கணக்குகள், பாட்ஸ் பயன்பாட்டை கட்டுப்படுத்தவே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பலர் தொடர்ந்து கூகுள் அக்கவுண்டை தொடங்கி, இலவச ஸ்டோரேஜை தவறாக பயன்படுத்துவதாக கூகுள் கண்டறிந்துள்ளது. இதனை தடுக்க போன் நம்பர் வெரிஃபிகேஷன் கட்டாயமக்கப்பட்டுள்ளது.

கூகுளின் கிளவுட் ஸ்டோரேஜ் தேவைகள் உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் டேட்டா ஸ்டோரேஜ் சர்வர், ஹார்வேர்டு செலவுகள் போன்ற செலவுகள் அதிகரித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இலவச ஸ்டோரேஜ் வழங்கும் முறையை கூகுள் தற்போது கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கு கூகுள் சப்போர்டடட் பேஜில் எல்லா கூகுள் கணக்குகளுக்கும் 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிக்க : JPEG புகைப்படங்கள் மூலம் அரங்கேறும் புதிய வகை மோசடி.. எச்சரிக்கும் சைபர் பாதுகாப்பு அமைப்புகள்!

ஆனால் தற்போது அது 15 ஜிபி வரை என மாற்றப்பட்டுள்ளது. அதாவது இனி அனைவருக்கும் 15ஜிபி உடனடியாக கிடைக்காது என்பதை குறிக்கிறது. ஆனால் போன் நம்பர் வெரிஃபிகேஷன் என்பது பயனர்களுக்கு அவர்களின் பிரைவசி குறித்து கவலையை உருவாக்கியுள்ளது. பலர் வெறும் இமெயில் பயன்பாட்டிற்காக போன் நம்பரை வழங்க விரும்புவதில்லை. அப்படிப்பட்ட பயனர்கள் இனி 5ஜிபி ஸ்டோரேஜ் உடன் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிரது. ஆனால் கூகுளின் இந்த நடவடிக்கையால் போலி கணக்குகள் குறையலாம் என கூறப்படுகிறது.

Follow Us