வாட்ஸ்அப் மெட்டா ஏஐ-ல் “Incognito Tab” அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?
Incognito Tab Introduced In WhatsApp Meta AI | உலகம் முழுவதும் உள்ள மக்களால் பரவலாக பயன்படுத்தப்படும் செயலி தான் மெட்டாவின் வாட்ஸ்அப். இதில் பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவி அம்சத்தில் தேடும் ரகசிய தகவல்களை பாதுகாக்க இன்காக்னிட்டோ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் மிக முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி உள்ளது. தகவல்களை விரைவாக பரிமாற்றம் செய்துக்கொள்வதற்காககவும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை பகிர்ந்துக்கொள்வதற்காகவும் இந்த செயலி பெரும் உதவியாக உள்ளது. இத்தகைய பல்வேறு அட்டகாசமான அம்சங்களை வாட்ஸ்அப் கொண்டுள்ள நிலையில், அதில் தற்போது ஒரு புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுதான் இன்காக்னிட்டோவில் மெட்டா ஏஐ (Incognito In Meta AI) பயன்படுத்தும் அம்சம். இந்த அம்சத்தின் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பில் மெட்டா ஏஐ-க்கு இன்காக்னிட்டோ டேப் அறிமுகம்
தற்போதைய இணைய உலகை கட்டுக்குள் வைத்திருக்கும் அம்சமாக செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) உள்ளது. சந்தேகங்களுக்கு விடை அளிப்பது, பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குவது, யோசனைகளை வழங்குவது என பல்வேறு இடங்களில் கைடாகவும், சில இடங்களில் வழிநடத்தும் முதன்மை அம்சமாகவும் செயற்கை நுண்ணறிவு உள்ளது. செயற்கை நுண்ணறிவு அம்சம் மனிதர்களின் வாழ்வில் முக்கியத்துவமாக மாறிய நிலையில், சமூக ஊடகங்களில் அவற்றை சமூக ஊடக நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயனர்களுக்காக வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தான் வாட்ஸ்அப்பில் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இனி உங்கள் இன்ஸ்டாகிராம் சாட்க்கு பாதுகாப்பு இல்லை.. End-To-End Encryption அம்சத்தை நீக்கிய மெட்டா!




இன்காக்னிட்டோ டேப் – சிறப்பு அம்சங்கள் என்ன?
இன்காக்னிட்டோ டேப் என்பது பயனர்கள் கூகுளில் தேடிய அம்சங்கள் யாருக்கும் தெரியாமல் இருக்க உதவும். இதே அம்சம் தான் தற்போது வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மெட்டா, வாட்ஸ்அப்பில் உள்ள மெட்டா ஏஐ-க்கு இன்காக்னிட்டோ டேபை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து கூறியுள்ள அந்த நிறுவனம், வாட்ஸ்அப்பில் உள்ள மெட்டா ஏஐ மற்றும் மெட்டா ஏஐ ஆப் ஆகியவற்றில் இன்காக்னிட்டோ டேப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் இன்ஸ்டாகிராம் செயலி!
பொருளாதாரம், உடல்நலம், பணி, மனநலம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் குறித்து செயற்கை நுண்ணறிவில் கேட்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அம்சமாக இது உள்ளது. இந்த அம்சத்தில் தேடுவது அடுத்தவர்கள் பார்க்காத வகையில் பாதுகாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.