AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் இன்ஸ்டாகிராம் செயலி!

Instagram Competition App To Snapchat | உலக அளவில் அதிக மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக உள்ள இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக ஒரு செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், புதியதாக அறிமுகமாக உள்ள இந்த செயலியின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் இன்ஸ்டாகிராம் செயலி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 May 2026 23:28 PM IST

தொழில்நுட்ப வளர்ச்சியின் (Technology Development) காரணமாக பொதுமக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்பாடு அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் அனைத்து சேவைகளுக்கும் செயலிகள் உள்ள நிலையில், பலருக்கும் ஸ்மார்ட்போன் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என அனைத்திற்கும் பல செயலிகள் உள்ள நிலையில், தற்போது புதிய செயலி ஒன்றை இன்ஸ்டாகிராம் (Instagram) அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, ஸ்னாப்சாட் (Snapchat) செயலிக்கு போட்டியாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், ஸ்னாப்சாட்டுக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ள இன்ஸ்டென்ட் செயலி குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்னாப்சாட்டுக்கு போட்டியாக இன்ஸ்டென்ட் என்ற செயலியை அறிமுகம் செய்யும் இன்ஸ்டாகிராம்

அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய செயலியாக ஸ்னாப்சாட் உள்ளது. இந்த செயலியில் உரையாடல், பொழுதுபோக்கு உள்ளிட்ட அம்சங்களை தாண்டி புகைப்படங்கள் தான் முக்கிய அம்சமாக உள்ளது. இதற்காகவே பலரும் இந்த செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் தான் ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிய செயலியை அறிமுகம் செய்வதற்கான பணிகளை கையில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க : கூகுள் பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல்.. வெளியான சிறப்பு அம்சங்கள்!

சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ள இன்ஸ்டாகிராம்

அதாவது இன்ஸ்டாகிராம் நிறுவனம் இன்ஸ்டென்ட் என்ற புதிய புகைப்பட பகிர்வு செயலியை அறிமுகம் செய்துள்ளது. சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இந்த செயலிக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : சம்மர் சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் சோதனையில் இருக்கும் இந்த செயலி, விரைவில் அனைத்து பொதுமக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த செயலியில், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தானாகவே மறைந்துவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளில் ஒரு அம்சமாக இது இருந்த நிலையில், இதனை ஒரு செயலியாகவே இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us