AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோடையில் எளிதாக வெப்பமடையும் ஸ்மார்ட்போன்.. பாதுகாப்பாக வைப்பது எப்படி?

Smartphones Getting Excessive Heat During Summer | பொதுவாகவே அதிக பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஸ்மார்ட்போன் அதிகமாக சூடாகும். இந்த நிலையில், கோடைக்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் விரைவாக வெப்பமடையாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோடையில் எளிதாக வெப்பமடையும் ஸ்மார்ட்போன்.. பாதுகாப்பாக வைப்பது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 May 2026 23:31 PM IST

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், எங்கு பார்த்தாலும் சூரியன் சுட்டெரிக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகள், மின்சாதன பொருட்கள் என அனைத்திற்கும் அதீத வெப்பம் மிகப்பெரிய எதிரியாக உள்ளது. இந்த சூழலில் ஸ்மார்ட்போன்கள் அதிக வெப்பமடைந்து வெடிப்பது உள்ளிட்ட மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்கும் அபாயம் உள்ளது. எனவே ஸ்மார்ட்போன் (Smartphone) வெப்பமடைவதற்கான காரணங்கள் எவை என்று தெரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப உங்களது ஸ்மார்ட்போன்களை பாதுகாத்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும்.

கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தை எதிர்க்கொள்ளும் ஸ்மார்ட்போன்

கோடைக்காலத்தில் மனிதர்கள் மட்டுமன்றி ஸ்மார்ட்போன்களும் மிக அதிகமான வெப்பத்தை எதிர்க்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, உங்களது ஸ்மார்ட்போன் பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். அதாவது, கோடைக்காலத்தில் நிலவும் இந்த அதீத வெப்பம், உங்களது ஸ்மார்ட்போன் எந்த வித சிக்கல்களும் இல்லாமல் இயங்க ஸ்மார்ட்போனுக்குள் இருக்கும் தெர்மல் சிஸ்டம் அதிகமாக உழைக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

இதையும் படிங்க : இன்வர்டர் ஏசி vs கன்வர்டெபிள் ஏசி: எது மின் செலவை குறைக்கும்? எது சிறந்த குளிர்ச்சி தரும்?

கோடைக்காலத்தில் வெளிப்புற சூழலில் நிலவும் இந்த சிக்கலை சரிசெய்ய உங்களது ஸ்மார்ட்போனில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. அதாவது, அதிக அளவு கொண்ட செயலிகளை பயன்படுத்துவது, ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வது உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளும் சிறிய சிறிய மாற்றங்கள் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து உங்களது ஸ்மார்ட்போனை பாதுகாக்க உதவும்.

ஸ்மார்ட்போனை உள்ளிருந்து வெப்பம் அடையாமல் பாதுகாப்பது எப்படி?

  • அதிக வெப்பத்தின் காரணமாக உங்களது ஸ்மார்ட்போனின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே வெளியே செல்லும்போது உங்களது ஸ்மார்ட்போனில் போதுமான அளவு சார்ஜ் உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
  • அதிக வெப்பமான சூழலில் உங்கள் ஸ்மார்ட்போனில் செயல்திறன் குறைந்து அது மெதுவாக இயங்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், வெயிலில் செல்லும்போது ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
  • நீங்கள் வெளியே செல்லும்போது உங்களது ஸ்மார்ட்போனை காருக்குள் வைப்பதை தவிர்த்துவிடுங்கள். காரணம், அது உங்களது ஸ்மார்ட்போனுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும். ஏனென்றால் வெப்பமான சூழலில் நீங்கள் ஸ்மார்ட்போனை காருக்குள் வைத்துவிட்டு சென்றால் அது அதிகப்படியான அளவான 45 டிகிரி செல்சியஸை தாண்டிவிடும்.

Follow Us