AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீட்டிலிருந்தே காற்றின் தரக் குறியீட்டை தெரிந்துகொள்ளலாம் – எப்படி தெரியுமா?

Check AQI Using Smartphone : அதிகரித்து வரும் மாசுபாட்டால், நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு தூய்மையானது என்பதை அறிவது மிகவும் அவசியம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி காற்று மாசுபாட்டை எப்படி தெரிந்து கொள்வது எப்படி என இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டிலிருந்தே காற்றின் தரக் குறியீட்டை தெரிந்துகொள்ளலாம் – எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Nov 2026 14:04 PM IST

அதிகரித்து வரும் மாசுபாட்டால், நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு தூய்மையானது என்பதை அறிவது மிகவும் அவசியம். சில நேரங்களில், வெளிப்புற வானிலையை மட்டும் கொண்டு காற்று மாசுபாட்டின் அளவைக் கணிப்பது கடினமாக இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஸ்மார்ட்போனை (Smartphone) பயன்படுத்தி, உங்கள் வீட்டில் இருந்தபடியே சில நிமிடங்களில் உங்கள் பகுதியின்(காற்றின் தரக் குறியீடுஅளவை நீங்கள் சரிபார்க்கலாம்.

இதற்கு எந்த சிறப்பு உபகரணமும் தேவையில்லை. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் SAMEER என்ற செயலி மற்றும் இணையதளம் மட்டுமின்றி, கூகுள் மேப்ஸ், IQAir, மற்றும் AQI.in போன்ற தளங்களும் காற்றின் தரத் தகவல்களை வழங்குகின்றன. அவற்றை எவ்வாறு பயன்படுத்தி நிமிடங்களில் காற்றின் தரக் குறியீட்டை கண்டறியலாம் என்பதைப் பார்ப்போம்.

சமீர் செயலி மூலம் காற்றின் தரக் குறியீட்டை எப்படி தெரிந்துகொள்வது

சமீர் செயலி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் உருவாக்கப்பட்டது. இந்தச் செயலி நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் காற்றின் தரம் குறித்த தகவல்களை வழங்குகிறது. இதை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். செயலியைத் திறந்து உங்கள் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, அருகிலுள்ள கண்காணிப்பு நிலையங்களின் காற்றின் தரக் குறியீட்டை நீங்கள் காண்பீர்கள். PM2.5 மற்றும் PM10 போன்ற மாசுத் தரவுகளையும் நீங்கள் பார்க்கலாம்.

இதையும் படிக்க : “வாட்ஸ்அப் வதந்திகளை நம்பி மீடியா ட்ரையலா?”.. தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு ஆதரவு குரல் கொடுத்த மாணிக்கம் தாகூர்!

இணையதளம் மூலம் காற்றின் தரத்தை எப்படி தெரிந்துகொள்வது?

நீங்கள் செயலியைப் பதிவிறக்கம் செய்ய விரும்பவில்லை என்றால், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்திலும் காற்றின் தரக் குறியீட்டை சரிபார்க்கலாம். இதைச் செய்ய, இணையதளத்திற்கு சென்று உங்கள் நகரம் அல்லது பகுதியின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே, வெவ்வேறு இடங்களுக்கான காற்றின் தரக் குறியீடு மற்றும் காற்று மாசுபாடு நிலைகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

கூகுள் மேப்ஸில் இருந்து காற்றின் தரக் குறியீட்டை தெரிந்துகொள்வது எப்படி?

கூகுள் மேப்ஸ் காற்றின் தரத்தைப் பார்ப்பதற்கான ஒரு வசதியையும் வழங்குகிறது. இதைச் செய்ய, கூகுள் மேப்ஸ் செயலியைத் திறந்து, மேலே உள்ள லேயர்ஸ் (Layers) என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும். அதில் ‘ஏர் குவாலிட்டி’ என்ற லேயரைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, வெவ்வேறு பகுதிகளுக்கான காற்றின் தரக் குறியீடு வரைபடத்தில் தோன்றும். இதன் மூலம், நீங்கள் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு உங்களைச் சுற்றியுள்ள காற்றின் தரத்தைச் சரிபார்க்கலாம்.

IQAir மூலமாக உங்கள் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் காற்றின் தரக் குறியீட்டையும்நீங்கள் சரிபார்க்கலாம். அதன் செயலி அல்லது இணையதளத்தில் உங்கள் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தால் மட்டும் போதும். இது காற்றின் தரம் மற்றும் மாசுபாடு தொடர்பான பிற தகவல்களை வழங்குகிறது.

இதையும் படிக்க : புதிய ஏஐ இமேஜ் எடிட் அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்.. அதுவும் ஐபோன் பயனர்களுக்கு மட்டும்!

காற்றின் தரத்தை அளவிடும் முறை

  • 0-50: நல்ல காற்று
  • 51-100: திருப்திகரமானது
  • 101-200: மிதமான மாசுபாடு
  • 201-300: மோசமான காற்று
  • 301-400: மிகவும் மோசமான காற்று
  • 401-500: கடுமையான மாசுபாடு

உங்கள் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அதிகமாக இருந்தால், வெளியே செல்லும்போது எச்சரிக்கையுடன் இருங்கள். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Follow Us