இனி சிறுவர்கள் இன்ஸ்டாவில் போலி வயதை போட முடியாது.. விரைவில் வரும் முக்கிய அம்சம்!
Instagram Safeguards Teens from Online Risks | சிறுவர்களை இன்ஸ்டாகிராம் செயலியில் சந்திக்கும் சிக்கல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில், மெட்டா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் பாதுகாப்பை உறுதி செய்யும் மேலும் ஒரு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராம் (Instagram) டீனேஜர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொள்ள உள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகள் மூலம் சிறுவர்கள், பாலியல் தொல்லை, சைபர் மோசடிகளில் சிக்கி தவிக்கின்றனர். இதற்காக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது முக்கிய மாற்றத்தை மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமின் அந்த புதிய அம்சம் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏஐ அம்சத்துடன் கூடிய வயதை கணிக்கும் அம்சம் : மெட்டா அறிவிப்பு
இன்ஸ்டாகிராம் செயலியில் சிறுவர்கள் அதிக சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகின்றனர் . இதன் காரணமாக கட்டுப்பாடுகளுடன் சிறுவர்களுக்கான கணக்கை பயன்படுத்த அந்த நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான், தற்போது புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள உள்ளது. அதாவது, ஏஐ அம்சத்துடன் கூடிய வயதை கணிக்கும் அம்சத்தை (AI Powered Age Guessing Technology) அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. நேற்று (நவம்பர் 09, 2026) இந்த அறிவிப்பை மெட்டா வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : சொமேட்டோவில் இனி பிடித்த கடைகளில் ஆர்டர் செய்யலாம்.. தூரம் ஒரு Matter இல்லை.. வந்தது புதிய அம்சம்!




டீன் கணக்குக்கு மாற்றப்படும் கணக்குகள்
இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், டீன் கணக்கு (Teen Accounts) என்ற அம்சத்தை இன்ஸ்டாகிராம் வைத்துள்ளது. இந்த அம்சத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கணக்கு தொடங்கிக்கொள்ளலாம். இந்த கணக்கில் மற்ற கணக்கு உள்ளதை போல் இருக்காது. சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சில கட்டுப்பாடுகள் இந்த கணக்குக்கு இருக்கும்.
இதையும் படிங்க : ChatGPT மூலம் உங்கள் புகைப்படத்தை GIF ஆக மாற்றலாம்.. எப்படி?
போலியாக வயதை குறிப்பிடும் சிறுவர்கள்
சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் டீன் கணக்குகளை செயல்படுத்தி வரும் நிலையில், சிறுவர்கள் சிலர் கட்டுப்பாடுகள் இல்லாமல் இன்ஸ்டகிராம் கணக்கை பயன்படுத்த போலியான வயதை குறிப்பிட்டு கணக்கு தொடங்குகின்றனர். அதாவது, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தங்களுக்கு 18 வயதுக்கு மேல் உள்ளதை போல போலியான வயதை குறிப்பிடுகின்றனர்.
இதன் மூலம் அவர்கள் மீண்டும் சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான், இந்த சிக்கலை தடுக்க செயற்கை நுண்ணறிவு அம்சத்துடன் கூடிய வயதை கண்டறியும் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது. இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.