AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஐபோன் டுயோவில் 1 லட்சம் செயலிகளை பயன்படுத்தலாம்.. ஆப்பிள் முக்கிய தகவல்!

Apple Update On iPhone Duo | ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அந்த வகையில் தான், தனது ஆப்பிள் டுயோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அது குறித்த முக்கிய தகவலை ஆப்பிள் தற்போது வெளியிட்டுள்ளது.

ஐபோன் டுயோவில் 1 லட்சம் செயலிகளை பயன்படுத்தலாம்.. ஆப்பிள் முக்கிய தகவல்!
ஐபோன் டுயோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Nov 2026 21:35 PM IST

ஆப்பிள் (Apple) நிறுவனம் இந்த ஆண்டு தனது ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (iPhone 18 Series Smartphones) அறிமுகம் செய்தது. அதில் ஒரு அட்டகாசமான படைப்பாக ஆப்பிள் டுயோ (Apple Duo) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த ஆப்பிள் டுயோ போனில் சுமார் 1 லட்சம் செயலிகளை பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது டுயோ ஸ்மார்ட்போன் குறித்து கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் டுயோவில் 1 லட்சம் செயலிகளை பயன்படுத்தலாம்

ஆப்பிள் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தனது 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதில் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ (Apple iPhone 18 Pro), ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ மேஸ் (Apple iPhone 18 Pro Max) மற்றும் ஆப்பிள் டுயோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த சீரீஸில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்று ஸ்மார்ட்போன்களுமே மிகவும் அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளன. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போன்கள் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

இதையும் படிங்க : ChatGPT மூலம் உங்கள் புகைப்படத்தை GIF ஆக மாற்றலாம்.. எப்படி?

பெரும் வரவேற்பை பெற்ற ஆப்பிள் ஐபோன்கள்

ஆப்பிள் நிறுவனம் இந்த 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தபோது, அது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக ஏராளமான வாடிக்கையாளர்கள் ஷோ ரூம்களின் வாசல்களின் பல மணி நேரம் காத்திருந்து ஐபோன்களை வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க : வெறும் ரூ.15-க்கு அன்லிமிடெட் ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ!

ரூ.3 லட்சத்துக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் டுயோ

இந்த ஆப்பிள் டுயோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.3 லட்சத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, மூன்று ஸ்மார்ட்போன்களை வாங்கும் விலை ஆகும். இந்த ஸ்மார்ட்போன் மிகவும் விலை உயர்வாக இருந்தாலும் பலரும் மிகவும் ஆர்வத்துடன் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கி வருகின்றனர். தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே ஆர்டர் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 2027 ஆம் ஆண்டு தான் ஆப்பிள் ஐபோன் டுயோ கிடைக்கும் என ஆப்பிள் கூறியுள்ளது. இந்த நிலையில் தான், அந்த நிறுவனம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Follow Us