Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Smart Phone

Smart Phone

இன்று ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. தகவல் பெற, தொடர்பு கொள்ள, வீடியோ அழைப்புகள், ஆன்லைன் வங்கிசேவை, கல்வி, வேலை வாய்ப்புகள் என பல விஷயங்களிலும் உதவுகின்றன. ஸ்மார்ட்போன்கள் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள், டிஜிட்டல் நூலகங்கள், கல்வி சம்மந்தமான செயலிகள் என மாணவர்களுக்கு எளிதாக கற்றுக் கொள்ள உதவுகின்றன. கூகுள், யூடியூப், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் உலகையே நம் உள்ளங்கைக்கு கொண்டு வந்திருக்கிறது. மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு விரிவடைந்துள்ளது. வசதிகளுக்கு ஏற்ப குறைவான விலையில் இருந்து விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் கிடைப்பதால், இது அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் ஒரு தொழில்நுட்ப சாதனமாக மாறியுள்ளது. இன்று ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பது கேற்ப நம் வாழ்க்கையோடு கலந்திருக்கிறது

Read More

ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா அம்சத்தை கொண்ட ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!

Best Cameras Under 25,000 Rupees | மனிதர்கள் மத்தியில் ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், அவற்றின் விலையும் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

இரவு முழுக்க போனை சார்ஜில் வைத்திருக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!

Smartphone Battery Warning: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்றியமையாதது. நாள் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டியிருப்பதால் அனைவரும் இரவிலேயே போனை சார்ஜ் போடுகிறார்கள். ஆனால் அப்படி செய்வதால் போனுக்கு ஆபத்து என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த கட்டுரையில் இரவு முழுவதும் சார்ஜ் போடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

போன் ஸ்டோரேஜ் நிரம்பி விட்டதா? அப்போ இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க!

Smartphone Storage Tips : ஸ்மார்ட்போன்களில் நாம் மீண்டும் மீண்டும் சந்திக்கும் பிரச்னை நமது போன் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டது என்பது தான். இந்த கட்டுரையில் போன் ஸ்டோரேஜ் நிரம்பும் பிரச்னையை எப்படி எளிதில் சரி செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் கேமராவில் தரமான வீடியோக்கள் எடுக்கும் 10 சூப்பர் டிப்ஸ்!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில், தரமான வீடியோ உருவாக்க தொழில்முறை கேமரா தேவையில்லை. ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் மற்றும் சில தொழில்நுட்ப யுக்திகள் lதெரிந்தால் போதுமானவை. இந்த கட்டுரையில் உங்கள் ஸ்மார்ட்போனில் சினிமா லெவல் குவாலிட்டியில் வீடியோ எடுக்க உதவும் 10 முக்கிய டிப்ஸ்களைப் பார்க்கலாம்.

சார்ஜ் செய்யும்போது இந்த தவறை செய்யாதீர்கள் – உங்கள் போன் வெடிக்கலாம்!

Smartphone Safety Alert : ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்றியமையாததாக மாறியிருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இன்றைய காலகட்டத்தில் உலகோடு தொடர்பில் இருக்க  போன் மிகவும் அவசியம். போனை சார்ஜ் செய்யும்போது செய்யும் சில சிறிய தவறுகள் பெரிய விபத்துகளை ஏற்படுத்தும். இந்த கட்டுரையில் போனை சார்ஜ் செய்யும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

iPhone 15 : வெறும் ரூ.26,000-க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 15.. அமேசான் அதிரடி!

Amazon iPhone 15 Deal | அமேசான் நிறுவனம் அவ்வப்போது ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஐபோன் 15 ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகையின் மூலம் ரூ.79,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.26.000-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

Mobile Radiation Concerns : உலகமே 5ஜி, 6ஜி என மின்னல் வேகத்தில் அப்டேட்டாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மக்களிடையே இருக்கும் பொதுவான பயம் என்னவென்றால் ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தான். உண்மையில் ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

போன் செய்யும்போது நெட்டை ஆனில் வைத்திருக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!

Cybercrime Alert : நமது ஸ்மார்ட்போன்களில் சில செயலிகளை டவுன்லோடு செய்யும் அவசரத்தில் செயலியின் சில செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கிறோம். பெரும்பாலான செயலிகள் நமது போனின் மைக்கை பயன்படுத்த அனுமதி கேட்கின்றன. இந்த நிலையில் ஒருவருடன் பேசும்போது நமது போனின் இண்டர்நெட் ஆனில் இருந்தால், அதனால் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

Smartphone : உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை இப்படி சுத்தம் செய்யுங்கள்.. அப்படியே புதுசுபோல இருக்கும்!

Smartphone Screen Cleaning Tips | தற்போதைய காலக்கட்டத்தில் நாம் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துகிறோம். அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக ஸ்மார்ட்போன் உள்ள நிலையில், அதில் தூசி மற்றும் கிருமிகள் உருவாவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை அடிக்கடி சுத்தம் செய்வது ஸ்கிரீனையும், உடல் நலத்தையும் பாதுகாக்க உதவும்.

அமெரிக்காவிலேயே உற்பத்தியாகும் டிரம்ப் மொபைல் – அப்படி என்ன ஸ்பெஷல்? விலை எவ்வளவு?

Trump unveils new smartphone : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சார்பில் அமெரிக்காவிலேயே உருவாகும் வகையில் டிரம்ப் மொபைல் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தவிருக்கிறது. தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த டி1 மாடல் போன் முழுக்க அமெரிக்காவிலேயே தயாராவிருக்கிறது.

கரண்ட் இல்லாமல் போனை சார்ஜ் செய்ய முடியவில்லையா? இந்த எளிய வழிகளை டிரை பண்ணுங்க!

Phone Charging Tips : வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது மின்சாரம் இல்லாமல் மொபைல் போனை சார்ஜ் செய்ய முடியாது. குறிப்பாக அவசர காலங்களில் மொபைல் போனில் சார்ஜ் இல்லாமல் இன்னல்களை சந்திக்க நேரிடும். இந்த கட்டுரையில் கரண்ட் இல்லாத போது மொபைல் போனை சார்ஜ் செய்யும் எளிய வழிகளைப் பார்க்கலாம்.

மழை காலங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி? ஈஸியான டிப்ஸ் இதோ!

Monsoon Mobile Safety Tips : மழைகாலங்களில் தான் ஸ்மார்ட்போன்கள் அதிகம் சேதமடைகின்றன. உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தாலோ அல்லது நனைந்தாலோ முதலில் போனை ஆஃப் செய்வது நல்லது. தண்ணீரில் விழுந்த பிறகும தொலைபேசி தொடர்ந்து இயக்கத்தில் இருந்தால், மேலும் சேதமடையும் அபாயம் உள்ளது.

மீண்டும் வரும் நோக்கியா 1100 – 4 வாரங்களுக்கு நிற்கும் சார்ஜ், டிஎஸ்எல்ஆர் தரத்தில் கேமரா! விலை எவ்வளவு?

Nokia 1100 : நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 1100 போனை புதிய அம்சங்களுடன் விரைவில் மீண்டும் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த போனில் டிஎஸ்எல்ஆருக்கு நிகரான கேமரா வசதி, ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் பேட்டரி வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ரூ.9000 தள்ளுபடியில் ரெட்மி நோட் 14 ப்ரோ: இவ்ளோ தான் விலையா?

Massive Discount on Redmi : இந்தியாவில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 14 Pro ஸ்மார்ட்போனை மிக குறைந்த விலையில் நாம் வங்க முடியும். அமேசான் தளத்தில் கிடைக்கும் இந்த சிறப்பு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் விவோ முதலிடம்! ஜியோமி, சாம்சங் நிலை என்ன?

Top Smartphones in 2025 : 2025 முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 7% வீழ்ச்சியடைந்துள்ளது. பிராண்டட் போன்களின் விற்பனை குறைந்த நிலையில், விலையுயர்ந்த மற்றும் குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. விவோ பங்கு சந்தையில் 20 சதவிகித பங்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது.