ஆப்பிள் காதலர் சிறப்பு சலுகை.. ஐபோன்கள், மேக் மற்றும் டேப்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
Apple Offering Huge Discounts For Valentine's Day | ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது தனது அசத்தல் சேலை அறிவித்து வருகிறது. அந்த வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு தனது ஸ்மார்ட்போன்கள், டேப்கள் மற்றும் மேக் புக்குகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கியுள்ளது.
இன்னும் ஒருசில நாட்களில் நாட்களில் உலகமும் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதாவது பிப்ரவரி 14, 2026 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது பண்டிகை கால சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், ஐபேட் மற்று மேக் புக் ஆகியவற்றை மிக குறைவான விலை அசத்தல் சலுகைகளுடன் வாங்கிக்கொள்ள முடியும். இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ள சிறப்பு சலுகையில் என்ன என்ன ஸ்மார்ட்போன்கள் மற்றும் மேக் புக்குகளுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேக் மற்றும் டேப்களுக்கு சிறப்பு சேலை அறிவித்த ஆப்பிள்
- எம் 4 சிப் உடன் கூடிய 14 இன்ச் மேக் புக் ப்ரோ (14 Inch Mac Book Pro) ரூ.1,59,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஐபோனின் விலை ரூ.1,69,000 ஆகும்.
- எம் 4 ப்ரோ சிப் உடன் கூடிய 16 இன்ச் மேக் புக் ப்ரோ (16 Inch Mac Book Pro) ரூ.2,39,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஐபோனின் விலை ரூ.2,49,000 ஆகும்.
இதையும் படிங்க : கூகுள் குரோமை பயன்படுத்த வேண்டாம்.. பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆப்பிள்!
ஐபோன்களுக்கு ரூ.5,000 வரை உடனடி கேஷ்பேக்
இந்த சேலில் ஆப்பிள் இணையதளம் மூலம் ஐபோன் வாங்கும் நபர்களுக்கு ரூ.5,000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. குறிப்பாக ரூ.82,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ.77,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆப்பிள் ரூ.4,000 கேஷ்பேக் வழங்குகிறது.
இதையும் படிங்க : விரைவில் வாட்ஸ்அப்பில் வர உள்ள கட்டண முறை.. அதிர்ச்சியில் பயனர்கள்!
ஆடியோ கேட்ஜெட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள்
ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள், மேக், மற்றும் டேப்லெட்டுகளுக்கு மட்டுமன்றி, ஆடியோ கேட்ஜெட்டுகளுக்கும் சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகிறது. குறிப்பாக ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 11-க்கு ரூ.4,000 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல ஆப்பிள் எஸ்இ 3-க்கு ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், ஏர்பாட் ப்ரோ 3 மற்றும் ஏர்பாட் 4 ஆகியவற்றுக்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.