Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரைவில் வாட்ஸ்அப்பில் வர உள்ள கட்டண முறை.. அதிர்ச்சியில் பயனர்கள்!

Payment System In WhatsApp | வாட்ஸ்அப் பயனர்களின் ஸ்டேட்டஸ்களுக்கு மத்தியில் விளம்பரங்கள் தோன்ற தொடங்கியுள்ளன. இந்த விளம்பரங்கள் இல்லாமல் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், இந்த கட்டண முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் வாட்ஸ்அப்பில் வர உள்ள கட்டண முறை.. அதிர்ச்சியில் பயனர்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jan 2026 21:43 PM IST

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலி தான் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்களிடம் தவிர்க்க முடியாத செயலியாக இது உள்ளது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பல தேவைகளுக்கான ஒரே தீர்வாக இது உள்ளது. இவ்வாறு பொதுமக்களின் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கும் வாட்ஸ்அப் செயலியில் விரைவில் கட்டண முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக வெளியாகி வரும் தகவல் பயனர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் 3 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்

உலக அளவில் சுமார் 3 பில்லியன் மக்கள் மெட்டாவின் இந்த வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ஏராளமான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் நிலையில், மெட்டா நிறுவனம் அதில் புதிய புதிய சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதுவரை சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வந்த மெட்டா, தற்போது பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது அது தான் பயனர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : கூகுள்-சாட் ஜிபிடி-யில் இதை தேடினால் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும்…இணையவாசிகளே கவனம்!

வாட்ஸ்அப்பில் விரைவில் அமலுக்கு வர உள்ள கட்டண முறை

வாட்ஸ்அப் செயலியில் அட்டகாசமான பல அம்சங்கள் உள்ள நிலையில், விரைவில் கட்டண முறை அமலுக்கு வர உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதன்படி, தற்போது பயனர்களின் வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ்களுக்கு மத்தியில் விளம்பரங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. இது வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த இடையூராக உள்ளதாக பயனர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போனை காரில் சார்ஜ் செய்வதில் இவ்வளவு சிக்கல்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

விளம்பரம் இல்லாத சேவையை பெற கட்டணம்

விளம்பரங்களை இடையூராக நினைக்கும் பயனர்கள், விளம்பரம் இல்லா சேவையை பெற கட்டணம் செலுத்த வேண்டும். முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் இந்த கட்டண முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.433-க்கு இந்த கட்டண முறை அறிமுகமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.