கூகுள் குரோமை பயன்படுத்த வேண்டாம்.. பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆப்பிள்!
Apple Warn iPhone and Mac Users | ஆப்பிள் தனது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், கூகுள் குரோம் பயன்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல் உள்ளதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என்று தனது பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பிரதான செயலிகளில் ஒன்றாக கூகுள் (Google) நிறுவனத்தின் குரோம் (Chrome) உள்ளது. இந்த நிலையில், ஐபோன் (iPhone) மற்றும் மேக் (Mac) பயனர்கள் குரோமை பயன்படுத்த வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனம் (Apple) கூறியுள்ளது. குரோம் செயலியை பயன்படுத்துவதின் மூலம் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அது கூறியுள்ளது பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், குரோம் பயன்பாடு குறித்து ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
குரோம் செயலியை பயன்படுத்த வேண்டாம் – ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை
உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் மிகப்பெரிய டெக் நிறுவனமாக ஆப்பிள் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்களை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். அவற்றின் தரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் காரணமாக ஏராளமான மக்கள் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் பயனர்களின் பாதுகாப்பு விதிகளை மிகவும் கடுமையானதாக வைத்துள்ளது. பயனர்கள் பாதுகாப்பில் சிக்கல் ஏற்படாத வகையில் பல புதிய அப்டேட்டுகள் மற்றும் சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஆப்பிள் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : 2026-ல் அறிமுகமாக உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அட்டகாசமான 5 கருவிகள்!
குரோமால் பாதுகாப்பு அபாயங்கள் – ஆப்பிள் எச்சரிக்கை
உலக முழுவதும் உள்ள தனது கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஆப்பிள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, பழைய குரோம் மற்றும் குரோம் வெர்ஷன்களால் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கு பதிலாக சபாரி உங்கள் தனியுரிமைகளை பாதுகாக்கும் என்று ஆப்பிள் தனது பயனர்களுக்கு கூறியுள்ளது. இதேபோல கூகுள் நிறுவனமும் குரோமை பயன்படுத்த வேண்டாம் என ஆப்பிள் பயனர்களை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க : கூகுள்-சாட் ஜிபிடி-யில் இதை தேடினால் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும்…இணையவாசிகளே கவனம்!
ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தும் நிலையில், இந்த் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.