நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படத்துக்காக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பெறும் சம்பளம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் அல்லு அர்ஜுன், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் புதிய படத்தில் இணைகிறார் என்ற தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. லோகேஷின் கடைசி படம் கூலி வசூலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அதனால் அல்லு அர்ஜுனின் நம்பிக்கை குறையவில்லை. அதனால் தான் தனது அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் ஒப்படைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை புஷ்பா படத்தின் தயாரிப்பாளர்களே தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.