Street View முதல் 3D காட்சிகள்.. அட்டகாசமான அம்சங்களை வழங்கும் கூகுள் மேப்ஸின் Ask Maps!
Google Map's Ask Maps | கூகுள் மேப்ஸ் செயலியில் பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆஸ்க் மேப்ஸ் என்ற அம்சத்தின் மூலம் தற்போது சில அசத்தல் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தெரியாத இடங்களுக்கு பயணம் செய்யும் மக்களுக்கான ஒரு சிறந்த அம்சமாக உள்ளது தான் கூகுள் மேப் (Google Maps). இந்த செயலியை பயன்படுத்தி முன்பின் செல்லாத இடங்களுக்கு கூட வேறு ஒருவரின் உதவியின்றி சென்று வர முடியும். உணவகங்கள், கடைகள் என எங்கு செல்ல வேண்டும் என்றாலும் அதன் முகவரியை உள்ளிட்டால் மட்டுமே போதுமானது. மேப் காட்டும் வழியில் பயணம் செய்யலாம். பல லட்சம் மக்கள் பயன்படுத்தும் இந்த கூகுள் மேப் செயலியில் அவ்வப்போது சில அசத்தல் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும். அந்த வகையில் தற்போது ஆஸ்க் மேப்ஸ் (Ask Maps) என்ற செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூகுள் மேப்ஸ் செயலியில் வந்த ஆஸ்க் மேப்ஸ் அம்சம்
கூகுள் மேப்ஸ் செயலியில் ஜெமினி செயற்கை நுண்ணறிவு (Gemini Artificial Intelligence) அம்சத்தால் இயங்கும் ஆஸ்க் மேப்ஸ் என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் இனி கூகுள் மேப்ஸ் வெறும் வழிகாட்டியாக மட்டுமன்றி பயனர்களுடன் உரையாடும் செயற்கை நுண்ணறிவு உதவியாளராகவும் இருக்கும். இந்த வசதியில் பயனர்கள், பயணத்தின் போது தங்களுக்கு ஏதேனும் தேவைகள் ஏற்பட்டால் அதனை கூகுள் மேப்பிடம் கேட்கலாம்.
இதையும் படிங்க : லேப்டாப், கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு?.. கண்டுபிடித்து சரி செய்வது எப்படி?




பயனர்களுக்கு உதவியாளராக மாறும் கூகுள் மேப்ஸ்
இதுதவிர மேலும் ஒரு கூடுதம் அம்சமும் கூகுள் மேப்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுதான் Immersive Navigation என்ற அம்சம். இந்த அம்சத்தின் மூலம் அருகில் உள்ள கட்டடங்கள், மேம்பாலங்கள் மற்றும் நிலப்பரப்பை காட்டும் 3டி காட்சிகள் வழங்கப்படும். இது பயனர்களுக்கு ஆப்பிள் மேப்ஸ் செயலி போன்ற அனுபவத்தை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. அதுதவிர பயனர்கள் தாங்கள் செல்லும் பாதையை பற்றி மேலும் விரிவாக தெரிந்துக்கொள்ள விரிவான காட்சியை இது வழங்குகிறது.
இதையும் படிங்க : விரைவில் அறிமுகமாகும் ஆப்பிள் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்.. வெளியான முக்கிய அம்சங்கள்!
நீங்கள் ஒரு இடத்திற்கு செல்லும் முன்பு ஸ்ட்ரீட் வீவ் (Street View) புகைப்படங்களின் மூலம் அந்த இடத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் முன்கூட்டியே பார்க்க முடியும். அதோடு மட்டுமன்றி, அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தலாமா என்பது தொடர்பான பரிந்துறைகளையும் பெற முடியும்.