கோயம்பேட்டில் மீண்டும் கிலோ ரூ.60-ஐத் தொட்ட வெங்காயம் – தீபாவளி நெருங்கும் நிலையில் மக்கள் அதிர்ச்சி
Onion Prices Surge : சென்னை கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. முதல் ரக நாசிக் வெங்காயம் அக்டோபர் 24, 2026 சனிக்கிழமை கிலோ ரூ.60-க்கு விற்பனையானது. தீபாவளி நெருங்கும் நிலையில் வெங்காய விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அக்டோபர் 25 : சென்னை கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. முதல் ரக நாசிக் வெங்காயம் அக்டோபர் 24, 2026 சனிக்கிழமை கிலோ ரூ.60-க்கு விற்பனையானது. சென்னையின் (Chennai) சில்லறை விற்பனைச் சந்தைகளில் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்படுவதால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
மூன்று மாதங்களில் ஏற்ற இறக்கம்
முதல் ரக நாசிக் வெங்காயத்தின் கோயம்பேடு மொத்த விலை, கடந்த மூன்று மாதங்களில் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது. அதன் படி கடந்த 2026 ஆகஸ்ட் மாமதம் ரூ.35 க்கு விற்கப்பட்ட வெங்காயம், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 22, 2026 அன்று விலை நிலவரப்படி ரூ.60 ஆக உயர்ந்ததது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் அக்டோபர் 22, 2026 அன்று ரூ.46 குறைந்த நிலையில் அக்டோபர் 24, 2026 நேற்றைய விலை நிலவரப்படி ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பரில் உச்சம் தொட்டு, அக்டோபர் தொடக்கத்தில் சற்றுக் குறைந்த விலை, கடந்த சில நாள்களில் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: உருவாகும் புயல் – இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மூடல்
பிற வெங்காய ரகங்களின் விலை
- கோயம்பேட்டில் சனிக்கிழமை நிலவரப்படி, பிற ரக வெங்காயங்களின் மொத்த விலை
- ஆந்திர வெங்காயம் சிறியது ரூ.36க்கும் பெரியது ரூ.42க்கும் விற்கப்படுகிறது.
- கர்நாடக வெங்காயம் சிறியது ரூ.38க்கும், பெரியது ரூ.60க்கும் விற்கப்படுகிறது.
- நாசிக் வெங்காயம் சிறியது ரூ.40க்கு விற்கப்படுகிறது.
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு , தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் ஆகியவற்றின் மூலம் நாசிக்கிலிருந்து வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, நகர்ப்புற நியாய விலைக் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வீதம் ரூ.35-க்கு அரசு விற்பனை செய்து வருகிறது. எனினும், வெளிச்சந்தையில் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
விலை உயர்வுக்குக் காரணம் என்ன?
இதுகுறித்து கோயம்பேடு வெங்காய மொத்த வியாபாரி ரகுநாத் கூறுகையில், நவராத்திரிப் பண்டிகைக் காலத்தில் வடமாநில விவசாயிகள் போதிய அளவுக்கு வெங்காயத்தைச் சந்தைக்குக் கொண்டு வரவில்லை. இதனால் கோயம்பேட்டுக்கான வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது என்றார்.
இதையும் படிக்க : திமுகவை மக்கள் தூக்கி எறிந்து விட்டனர்! விஜய்க்கு நிர்வாக அனுபவமில்லை.. ஆனால்.. வைகோ கூறிய அந்த வார்த்தை!
விலை எப்போது குறையும்?
தீபாவளிக்குப் பிறகு புதிய வெங்காயம் அறுவடைக்கு வரும் என்பதால், வடமாநில வியாபாரிகள் தங்களிடம் உள்ள இருப்பை தீபாவளிக்கு முன்பே முழுமையாக விற்க முயல்வார்கள் என அவர் தெரிவித்தார். இதனால் வரத்து அதிகரித்து, திங்கள் அல்லது செவ்வாய் முதல் விலை ஓரளவு குறையக்கூடும்.
ஆனால், நவம்பர் 8 அன்று தீபாவளி வருவதால், பண்டிகைத் தேவை அதிகரிக்கும் நவம்பர் முதல் வாரத்தில் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது. தீபாவளிக்குப் பிறகு புதிய அறுவடை வெங்காயம் சந்தைக்கு வந்து வரத்து அதிகரிக்கும்போது, விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் ரகுநாத் தெரிவித்தார்.



